துண்டு துண்டாக கிடைத்த வாலிபர் பிணம்: சென்னையில் பயங்கரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை அருகே கோயம்பேடு பகுதியில் தலையில்லாத முண்டம் ஒன்று கைகள் இரண்டும்துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அந்நபர் யார் என்று போலீஸார் விசாரணைநடத்தி வருகின்றனர்.

கோயம்பேடு மார்க்கெட் அருகே உள்ள சின்மயா நகரில் உள்ள ஒரு சாக்கடையில் இரண்டு மனிதக்கைகள் மிதப்பதைப் பார்த்த சிலர் அலறி அடித்துக் கொண்டு போலீசாரிடம் தகவல் கொடுத்தனர்.

உடனடியாக விரைந்து வந்து அந்தக் கைகளை மீட்ட போலீசார், உடல் கிடைக்கிறதா என்று தேடிப்பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை.

இந்நிலையில் சாக்கடைக்குச் சிறிது தூரத்தில் இன்னொரு சாக்கடையில் ஒரு சாக்கு மூட்டை மிதந்துகொண்டிருந்தது. அதைக் கைப்பற்றிய போலீசார் அதைத் திறந்து பார்த்தபோதுதான் ஒரு மனித உடல்கிடப்பது தெரிய வந்தது.

அந்த உடல் தலை, கைகள், கால்கள் இல்லாமல் வெறும் முண்டமாக இருந்தது. இதையடுத்து மோப்பநாயை வரவழைத்து தலை, கால்களைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

அந்தச் சாக்கடைப் பகுதியிலேயேதான் நாய் சுற்றிச் சுற்றி வந்தது. எனவே தலையும் கால்களும்அங்குதான் கிடக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

கொலை செய்யப்பட்டவர் ஒரு வாலிபர் என்று சந்தேகிக்கும் போலீசார், பல பேர் சேர்ந்து அவரைக்கொலை செய்து தலை, கைகள், கால்களைத் துண்டித்துப் போட்டுள்ளதாகவும் கருதுகின்றனர்.

பிணம் அழுகாத நிலையில் இருந்ததால் கொலை நடந்து ஓரிரு நாட்கள்தான் ஆகியிருக்கும் என்றுதெரிகிறது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+