மரத்தடியில் நடக்கும் வகுப்புகள்
சென்னை:
சென்னை ராணி மேரி கல்லூரியில் மரத்தடியில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. போராடும்மாணவிகளுக்கு ஆதரவாக முன்னாள் மாணவிகள் கலந்து கொண்ட உணர்ச்சிகரமான கூட்டம்நேற்று நடந்தது.
ராணி மேரி கல்லூரி இடிப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதால்தற்போது அங்கு அமைதி திரும்பியுள்ளது.
ஆனாலும் மாணவிகள் தங்கள் உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டுதான் உள்ளனர்.மேலும் வரும் 23ம் தேதி தொடங்கவுள்ள செமஸ்டர் தேர்வுகளுக்கும் மாணவிகள் தயாராகிவருகிறார்கள்.
கல்லூரிக்குத் தற்போது காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், மாணவிகள்வகுப்புகளுக்குச் செல்ல முடியாமல் மரத்தடியிலேயே அமர்ந்து பாடம் படிக்கிறார்கள். அவர்களுக்குஆசிரியைகள் பாடம் சொல்லித் தந்து கொண்டிருக்கின்றனர்.
"வகுப்புகள் அனைத்தும் சீல் வைத்து மூடப்பட்டுள்ளதால் நாங்கள் இவ்வளவு சிரமப்பட வேண்டியுள்ளது.செமஸ்டர் தேர்வு வேறு நெருங்கிக் கொண்டிருக்கிறது. மேலும் கோடை வெயிலும் கொளுத்திக் கொண்டிருக்கிறது.எனவே உடனடியாக வகுப்புகளைத் திறந்து விட வேண்டும்" என்று மாணவிகளும், ஆசிரியைகளும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
கல்லூரி விடுதியின் மெஸ் மூடப்பட்டு விட்டதால் மாணவிகள் நிலை மிகவும்திண்டாட்டமாகத்தான் உள்ளது. அவர்களுடைய பெற்றோர் கொண்டு வரும் சாப்பட்டையேசாப்பிட்டு வருகின்றனர். அதிலும் வெளியூர் மாணவிகளின் நிலை பரிதாபம்தான்.
கல்லூரியை இடிக்க மாட்டோம் என்று அரசு உறுதியாகக் கூறும் வரை உள்ளிருப்புப்போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என்று உறுதியுடன் மாணவிகள் கூறி வருகின்றனர்.
முன்னாள் மாணவிகள் உணர்ச்சி மயம்:
இதற்கிடையே ராணி மேரி கல்லூரியின் முன்னாள் மாணவிகள், இன்னாள் மாணவிகளின்போராட்டத்திற்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் மாணவிகள் கலந்து கொண்ட கூட்டம் ஒன்று நேற்று நடந்தது. இதில் 85 வயது பாட்டிமுதல் கடந்த ஆண்டு பட்டம் பெற்ற இளம்பெண் வரை நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டனர்.
ராணி மேரி கல்லூரி தற்போது இருக்கும் இடத்தை கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்ஆங்கிலேயரிடம் தானமாகக் கொடுத்தவரின் குடும்பத்தைச் சேர்ந்த 90 வயது முதியவரும் இந்தக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அவரைக் கண்டதும் முன்னாள், இன்னாள் மாணவிகள் கண்ணீர்வடித்தனர்.
பழம்பெருமை வாய்ந்த இந்தக் கல்லூரியை இடிக்கும் அரசின் முடிவு முட்டாள்தனமானது என்றேஅனைவரும் இந்தக் கூட்டத்தில் பேசினார்கள்.
"இந்தக் கல்லூரியைக் காப்பதற்காகப் போராடும் மாணவிகளுக்கு எங்களுடைய ஆதரவுஎப்போதும் உண்டு. நாங்களும் எங்கள் உயிரைக் கொடுத்தாவது இந்தக் கல்லூரியைக் காப்போம்"என்று முன்னாள் மாணவிகள் முழங்கிய போது இன்னாள் மாணவிகள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டநிலையில் இருந்தனர்.
ஆலிவ் பால் என்ற 102 வயதான ஒரு முன்னாள் மாணவி, "ராணி மேரி கல்லூரியை இடிப்பது என்பதுமுட்டாள்தனமான காரியம். இப்படி ஒரு முதல்வரை நான் இதுவரை பார்த்ததே இல்லை. கல்லூரியைப் புதுப்பிக்கநான் 1 கோடி ரூபாய் கூடத் தயாராக உள்ளேன்" என்று உருக்கத்துடன் கூறினார்.
நுழைவுத் தேர்வு இங்கு நடக்காது:
இதற்கிடையே அண்ணா பல்கலைக்கழகம் நடத்தவுள்ள நுழைவுத் தேர்வுக்கான தேர்வுமையங்களின் பட்டியலிலிருந்து ராணி மேரி கல்லூரி நீக்கப்பட்டுள்ளது.
மருத்துவம், பொறியியல், விவசாயம் போன்ற தொழிற்சார்ந்த பட்டப் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. மாநிலத்தின் பல்வேறு மையங்களில் இந்ததேர்வு நடக்கிறது.
ராணி மேரி கல்லூரியிலும் இந்தத் தேர்வுகள் நடப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. 562மாணவர்களுக்கு இங்கு தேர்வு எழுத நுழைவுச் சீட்டுகளும் வழங்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் தற்போது ராணி மேரி கல்லூயில் நுழைவுத் தேர்வு நடைபெறாது என்று அண்ணாபல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
ராணி மேரி கல்லூரியில் தற்போது பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் அதற்குப் பதிலாக கிண்டியில்உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூயில் தேர்வு நடக்கும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
ராணி மேரி கல்லூரியில் தேர்வு எழுத நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டுள்ள அனைத்து மாணவர்களும்பொறியியல் கல்லூயில்தான் தேர்வு எழுத வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.
வரும் 12 மற்றும் 13ம் தேதி நுழைவுத் தேர்வுகள் நடக்கவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications