போஜ்சாலா தலம் இந்துக்கள் வழிபாட்டுக்காக திறப்பு
தர் (மத்திய பிரதேசம்):
மத்தியப் பிரதேசத்தில் சர்ச்சைக்குரிய போஜ்சாலா தலத்தை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும்இந்துக்கள் வழிபாட்டிற்குத் திறந்து விட வேண்டும் என்ற இந்தியத் தொல்பொருள் துறைஉத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து இன்று சுமார் 2,000 இந்துக்கள் போஜ்சாலா தலத்துக்கு வந்து வழிபட்டனர்.
அயோத்தியில் ராமர் கோவிலைப் போலவே மத்திய பிரதேசம் தர் பகுதியில அமைந்துள்ளபோஜ்சாலா-கமால் மெளலா மசூதி அமைந்துள்ள தலம் இந்துக்களுடையதா முஸ்லீம்களுக்குரியதாஎன்ற பிரச்சனை அடிக்கடி வெடித்து வருகிறது.
11ம் நூற்றாண்டு வழிபாட்டுத் தலமான போஜ்சாலா யாருக்குச் சொந்தம் என்பதில் இருதரப்பினரும் அவ்வப்போது மோதி வருகின்றனர். இதைத் தொடர்ந்து இந்தத் தலத்தை மத்தியப்பிரதேச அரசு தன் வசம் எடுத்துக் கொண்டு பூட்டி வைத்தது.
வெள்ளிக்கிழமைகளில் மட்டும் முஸ்லீம்கள் இங்கு வழிபாடு நடத்தலாம் என்றும், வசந்த் பஞ்சமிதினத்தன்று மட்டும் இந்துக்கள் இங்கு வழிபாடு நடத்தலாம் என்றும் விதி வகுக்கப்பட்டது.
ஆனால், தினமும் தங்களை வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என இரு மதத்தினரும் கோரிவந்தனர். அதை அரசு ஏற்கவில்லை. இந்நிலையில் சமீபத்தில் பா.ஜ.க. உள்ளிட்ட சில இந்துஅமைப்பினர் இந்த வழிபாட்டுத் தலத்தை முற்றுகையிட்டு திறக்க முயன்றனர்.
ஆனால், போலீசார் அவர்களை தடியடி நடத்திக் கலைத்தனர். இதைத் தொடர்ந்து வெடித்தகலவரத்தில் மூன்று பேர் வரை கொல்லப்பட்டனர். இதையடுத்து போஜ்சாலா மூடப்பட்டது.
இந்நிலையில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் இந்துக்கள் இங்கு வழிபாடு நடத்த அனுமதிக்கவேண்டும் என்று மத்தியப் பிரதேச அரசுக்கு தொல்பொருள் துறை நேற்று உத்தரவிட்டது.
இதையடுத்து ஜாக்ரன் மஞ்ச் என்ற அமைப்பைச் சேர்ந்த சுமார் 2,000 இந்துக்கள் இன்று காலைபோஜ்சாலாவுக்க வந்து வழிபாடு நடத்தினர்.
1997க்குப் பின்னர் முதல் முறையாக இந்துக்களுக்கு போஜ்சாலா திறந்துவிடப்பட்டுள்ளதால், சிறப்புபூஜைகள் நடைபெற்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications