அமெரிக்க வீரர்களுக்கு கருவிகள் வழங்கும் இந்திய நிறுவனம்
பெங்களூர்:
ஈராக்கில் போரில் ஈடுபட்டுளள அமெரிக்க வீரர்களுக்குத் தேவைப்படும் இரத்த மாற்று சிகிச்சைக்கானகருவிகளை இந்திய நிறுவனம் வழங்கி வருகிறது.
போர் முனையில் பயன்படும் வகையில் இந்தக் கருவிகள் பேட்டரியில் இயங்கும் வகையில்வடிவமைக்கப்பட்டுள்ளன. வீரர்களுக்கு மட்டுமின்றி காயமடைந்த பல ஈராக்கியர்களுக்கும் ரத்தம் ஏற்ற இந்தக்கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருவதார ஆப்டோ சர்க்யூட்ஸ் நிறுவனத் தலைவர் ரம்னானி தெரிவித்தார்.
போர் எதிர்ப்பு தீர்மானம்: ஒருவழியாய் நிறைவேற்றம்
இந் நிலையில் ஈராக் மீதான போரைக் கண்டித்து இந்திய நாடாளுமன்றத்தில் ஒருவழியாய் தீர்மானம்நிறைவேறியது.
இது போன்ற தீர்மானத்தை நிறைவேற்றவும் அமெரிக்காவைக் கண்டிக்கவும் மத்திய பா.ஜ.க. அரசு மறுத்தது.இதனால் எதிர்க் கட்சிகள் அமளியில் இறங்கி நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்கச் செய்தன. இதையடுத்து ஒருவழியாய் போருக்கு எதிராக ஒருமித்த தீர்மானம் இன்று நிறைவேற்றப்பட்டது.
இத் தீர்மானத்தை சபாநாயகர் மனோகர் ஜோஷி படித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
ஈராக்கை அமெரிக்கா தாக்கியது கண்டிக்கத்தக்கது.உடனடியாகப் போரை நிறுத்திவிட்டு அமெரிக்க- பிரிட்டிஷ்படைகள் ஈராக்கை விட்டு வெளியேற வேண்டும், ஈராக்கின் சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அந்நாட்டின் இறையாண்மைக்கு தீங்கு நேரக் கூடாது. ஐ.நா. தலைமையில் தான் அங்கு மறுசீரமைப்புப் பணிகள்நடக்க வேண்டும்.
சதாமின் ஆட்சியை நீக்க ராணுவரீதியில் நடவடிக்கை எடுத்தது தவறு. போர் குறித்து கவலை தெரிவிக்கும்நாடாளுமன்றம் ஈராக்கிய மக்களுக்கு முழு ஆதரவைத் தெரிவிக்கிறது. ஈராக்குக்கு ரூ. 100 கோடி அளவுக்குமருந்து, உணவுப் பொருள்களை வழங்க இந்தியா தயாராக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக அமெரிக்காவை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற எதிர்க் கட்சிகள் கோரின. அதை பா.ஜ.க. அரசுமறுத்தது. இதையடுத்து இரு தரப்பினரும் பேசி இத் தீர்மான வாசகங்களை முடிவு செய்தனர்.
போர் முடிவதற்கு முன்பாகவவாது தீர்மானம் போட்டதே மத்திய அரசு!
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications