தற்கொலை தாக்குதல் நடத்துங்கள்: பின் லேடன்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்:

ஈராக் மீது தாக்குதல் நடத்தி வரும் அமெரிக்க- பிரிட்டிஷ் படைகள் மீதும், அவர்களை ஆதரிக்கும் அரபு நாட்டுத்தலைவர்கள் மீதும் தற்கொலைத் தாக்குதல் நடத்துமாறு இஸ்லாமியர்களுக்கு பின் லேடன் அழைப்புவிடுத்துள்ளார்.

இஸ்லாமாபாத்தில் உள்ள அசோசியேட்ட் பிரஸ் சர்வதேச செய்தி நிறுவனக் கிளைக்கு பின் லேடனின் ஆடியோகேசட் இன்று வந்து சேர்ந்தது. அல்ஜீரியாவைச் சேர்ந்த ஆதில் என்பவர் இந்தக் கேசட்டைக் கொடுத்துவிட்டுச்சென்றதாக அசோசியேட்டர் பிரஸ் கூறியுள்ளது.

அதில் அரபு மொழியில் பின் லேடன் கூறியிருப்பதாவது:

ஈராக்கை அமெரிக்கா தாக்கியுள்ளது. அடுத்தபடியாக ஈரானையும் தாக்கும். தொடர்ந்து சவுதி அரேபியா, எகிப்து,சூடான் ஆகிய நாடுகளும் தாக்குதலுக்கு உள்ளாகும். எகிப்திலும் சவுதியிலும் உள்ள இஸ்லாமிய அமைப்புகளைஈராக்கில் உட்கார்ந்து கொண்டு அமெரிக்கா நசுக்க ஆரம்பிக்கும்.

ஆனால், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், குவைத், சவுதி அரேபியா ஆகிய நாடுகள் அமெரிக்காவைஆதரித்து வருகின்றன. ஈராக்கிய மக்கள் பலியாக இந்த நாடுகள் தான் முக்கியக் காரணம். இதனால் இந் நாட்டுஆட்சியாளர்களை கொன்று குவியுங்கள். அவர்கள் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்துங்கள்.

அமெரிக்கா மீதும் தாக்குதல் நடத்துங்கள். அமெரிக்காவை ஆதரிக்கும் இஸ்லாமிய நாடுகளின்ஆட்சியாளர்களைக் கொல்ல வேண்டிய புனிதக் கடமை ஒவ்வொரு முஸ்லீமுக்கும் உண்டு என்று கூறியுள்ளார்லேடன்.

இந்தக் கேசட் ஆப்கானிஸ்தானில் பதிவு செய்யப்பட்டதாகவும் அங்கிருந்து இதை பாகிஸ்தானுக்கு எடுத்துவந்ததாகவும் அசோசியேட்டட் பிரஸ் நிருபர்களிடம் ஆதில் கூறியுள்ளார்.

இந்தக் கேசட்டை பின் லேடனைச் சந்தித்த பாகிஸ்தானியரைக் கொண்டு அசோட்சியேட்டட் பிரஸ் ஆங்கிலத்தில்மொழி பெயர்ப்பு செய்தது. மொழி பெயர்ப்பு செய்த அந்த நபர் இது பின்லேடனின் குரல் தான் எனதிட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+