மும்பையில் "சார்ஸ்" நோய் பாதித்த அமெரிக்க பெண்?

Subscribe to Oneindia Tamil

மும்பை:

"சார்ஸ்" நோயால் பாதிக்கப்பட்டதாகக் கருதப்படும் ஒரு அமெரிக்க பெண் சுற்றுலா பயணிக்குமும்பையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ரிபெக்கா ராலே என்ற 23 வயது கொண்ட அந்த அமெரிக்கப் பெண் சீனா, கம்போடியா, வியட்நாம்மற்றும் தாய்லாந்து நாடுகளில் சுற்றுலா சென்று விட்டு கடந்த 3ம் தேதி இந்தியாவுக்கு வந்துசேர்ந்தார்.

மும்பை விமான நிலையத்தில் அவரைச் சோதனை செய்தபோது அவருக்கு "சார்ஸ்" நோய்இருப்பதற்கான அறிகுறிகள் தெரிந்தன. இதையடுத்து பரபரப்படைந்த டாக்டர்கள் ரிபெக்காவைகஸ்தூர்பா காந்தி மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளித்தனர்.

தனி வார்டில் சேர்க்கப்பட்ட அவருடைய உடல் நிலை தற்போது முன்னேறி வருவதாக டாக்டர்கள்தெரிவித்துள்ளனர். அவருக்கு சாதாரண தொண்டை வலிதான் என்றும் கூறப்படுகிறது.

ரிபெக்கா சுற்றுலா மேற்கொண்ட சீனா, தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகளில்தான் "சார்ஸ்"நோய் தாக்குதல் தீவிரமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜ்யசபாவில் எதிரொலி:

இதற்கிடையே "சார்ஸ்" நோய் விவகாரம் ராஜ்யசபாவில் இன்று எதிரொலித்தது.

டெல்லி மற்றும் மும்பை விமான நிலையங்களில் வெளிநாடுகளிலிருந்து நாள்தோறும்ஆயிரக்கணக்கான மக்கள் வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் அங்கு "சார்ஸ்" நோய்கண்டறிவதற்கான போதுமான மருத்துவ வசதிகள் செய்யப்படவில்லை என சில எம்.பிக்கள் குற்றம்சாட்டினர்.

உரிய மருத்துவ வசதிகள் உடனடியாக அளிக்கப்பட வேண்டும் என்று ஆளும் பா.ஜ.கவைச் சேர்ந்தஒரு எம்.பியே கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் "சார்ஸ்" நோய் காரணமாக இந்தியாவில் சுற்றுலா பாதிக்கப்படவில்லை என்று அந்தத்துறைக்கான அமைச்சர் ஜக்மோகன் இன்று ராஜ்யசபாவில் தெரிவித்தார்.

இவ்வாறு "சார்ஸ்" நோய் இந்தியாவையே பயமுறுத்திக் கொண்டிருந்தாலும் நம் நாட்டில் இதுவரைஎந்த "சார்ஸ்" நோயாளியும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் பிரதமர் வருத்தம்:

இதற்கிடையே "சார்ஸ்" நோய் தென் கிழக்கு ஆசியாவின் பொருளாதாரத்தைக் கடுமையாகப்பாதிக்கும் என்று இந்தியாவிற்கு வந்துள்ள சிங்கப்பூர் பிரதமர் கோ சோக் டங் கூறினார்.

சிங்கப்பூரில் "சார்ஸ்" நோய் அச்சம் காரணமாகக் கடந்த 20 நாட்களுக்கும் மேலாகப் பள்ளிகள்மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+