உயர் நீதிமன்றத்தில் அரசு விளக்கம்
சென்னை:
ராணி மேரி கல்லூரி பாழடைந்து, இடிந்து போகும் நிலையில் உள்ளதாலேயே அங்கு தலைமைச் செயலகம் கட்டமுடிவு செய்யப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
சென்னை ராணி மேரி கல்லூரியை இடிக்கக் கூடாது என்று கோரி உயர் நீதிமன்றத்தில் ஆசிரியர்கள் சங்கம்,மாணவர்கள் சார்பில் இதுவரை மொத்தம் 6 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்கள் அனைத்தும் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி கலிபுல்லா ஆகியோர் அடங்கிய முதன்மைடிவிஷன் பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன.
அப்போது தமிழக அரசின் பொதுத் துறை செயலாளர் பிச்சாண்டி சார்பில் ஒரு விளக்க மனு தாக்கல்செய்யப்பட்டது. அந்த மனுவில்,
தற்போதைய தலைமைச் செயலக கட்டடம் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாலும் அந்தக் கட்டடத்தில்தொடர்ந்து வேலை செய்தால் ஊழியர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று இருப்பதாலும் புதியதலைமைச் செயலகம் கட்டத் தீர்மானிக்கப்பட்டது.
மேலும் ராணி மேரி கல்லூரியும் பாழடைந்து போய் விட்டதால் அதை இடித்து விட்டு அங்கு புது தலைமைச்செயலகம் கட்ட அரசு கொள்கை முடிவு எடுத்தது. அதை சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
ராணி மேரி கல்லூரியை இடிப்பது அரசின் கொள்கை முடிவு. இதை யாரும் கேள்வி கேட்க முடியாது. எதிர்த்துவழக்கு தொடரவும் முடியாது என்று அம்மனுவில் கூறப்பட்டிருந்தது.
மாணவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மெரீனா கடற்கரையோரம் உள்ள கட்டடங்கள் அனைத்தும்கடலோர பாதுகாப்பு மற்றும் முறைப் படுத்துதல் சட்டத்தின் கீழ் வருகின்றன. எனவே இங்கு புதிய கட்டடம்கட்டுவதற்கு தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications