ஜெவுடன் வாக்குவாதம்: சட்டமன்றத்தில் காங்கிரஸ்வெளிநடப்பு
சென்னை:
வேலை நிறுத்தப் போராட்டம் செய்யும் அரசு ஊழியர்கள் சிறையில் அடைகப்படுவார்கள் என்ற தமிழக அரசின் எச்சரிக்கையைக் கண்டித்துஇன்று எதிர்க் கட்சிகள் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தன.
இன்று காலை அவை கூடியதும் சட்டசபையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அப்போது காங்கிரஸ்சட்டமன்றத் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் எழுந்து ராணிமேரிக் கல்லூரி விவகாரம், அரசு ஊழியர்கள் ஸ்டிரைக், அரசின் கைதுஎச்சரிக்கை ஆகியவை தொடர்பாக நான் கொடுத்த ஒத்திவைப்புத் தீர்மானம் என்னவாயிற்று என்று கேட்டார்.
அரசு ஊழியர்களை ஒடுக்குவதிலேயே குறியாக உள்ளது அரசு என்று குற்றம் சாட்டிய அவர், ஊழியர்களுடன் பேச்சு நடத்த அரச முன் வரவேண்டும். புதிய சலுகை எதையும் அவர்கள் கேட்கவில்லை. திடீரென வாபஸ் பெறப்பட்டதைத் தான் மீண்டும் கேட்கிறார்கள். அவர்களைசிறையில் தள்ளுவோம் போன்ற அறிவிப்புகளை வாபஸ் பெற வேண்டும் என்றார்.
மேலும் இந்த விஷயத்தில் அரசு தனது சுய கெளரவத்தில் தான் அதிக கவனம் செலுத்துகிறதே தவிர நியாயமான கோரிக்கைகளைபரிசீலிக்கும் நல்ல மனப்பக்குவம் அரசுக்கு இல்லை. ஊழியர்களை கைது செய்வோம் என்ற அறிவிப்பை முதல்வர் உடனே வாபஸ் பெறவேண்டும் என்றார்.
அப்போது குறுக்கிட்ட ஜெயலலிதா, நிதித்துறைச் செயலாளரும் தலைமைச் செயலாளரும் பலமுறை அரசு ஊழியர் சங்கங்களின்பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்திவிட்டனர். ஆனால், என்ன பேசப்பட்டது என்ற முழு விவரம் என்னிடம் இல்லை. காவல்துறை மானியக்கோரிக்கைகள் குறித்த விவாதத்துக்கு விவரங்கள் சேகரிப்பதில் நான் பிஸியாகிவிட்டேன்.
என்ன பேசப்பட்டது, அடுத்து என்ன செய்வது என்பது குறித்து அதிகாரிகளுடன் பேசிவிட்டுத் தான் நான் பதில் சொல்ல முடியும் என்றார்ஜெயலலிதா.
இதையடுத்து ராணி மேரிக் கல்லூரி விவகாரத்தை பாலசுப்பிரமணியம் கிளப்பினார். ஆனால், இந்த விவகாரம் நீதிமன்றத்தில்விசாரணையில் உள்ளதால் அது குறித்து பேச முடியாது என ஜெயலலிதா கூறினார்.
இதையடுத்து பாலசுப்பிரமணியம் தனது கட்சி எம்.எல்.ஏக்களுடன் வெளிநடப்பு செய்தார். வெளியே வந்த அவர் நிருபர்களிடம்பேசுகையில், இன்று முழுவதும் சட்டமன்றத்தை காங்கிரஸ் கட்சி புறக்கணிக்கும் என்றார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications