திடீர் தேர்வுகள் அறிவிப்பு: மாணவிகள் அதிர்ச்சி
சென்னை:
ராணி மேரிக் கல்லூரியை மூடிவிட்டதாக அறிவித்துள்ள தமிழக அரசு திடீரென வரும் 23ம் தேதி முதல் இறுதியாண்டுத் தேர்வுகள்தொடங்குவதாக அறிவித்துள்ளது. இதனால் மாணவிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்தக் கல்லூரியை இடித்துவிட்டு தலைமைச் செயலகம் கட்டும் முதல்வர் ஜெயலலிதாவின் முடிவை எதிர்த்து இக் கல்லூரி மாணவிகள்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து கல்லூரியை மூடவும், விடுதி, உணவகத்தை மூடவும் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
மாணவிகளுக்கு ஆதரவாக நடந்து கொண்ட கல்லூரி முதல்வரைத் தூக்கிவிட்டு புதிய முதல்வரை ஜெயலலிதா நியமித்தார். அவர்கிட்டத்தட்ட அதிமுகவைச் சேர்ந்தவர் போல செயல்பட ஆரம்பித்துள்ளார்.
கல்லூரி காலவரையின்றி மூடப்படுவதாக அறிவித்த அவர் பின்னர் வரும் 21ம் தேதி கல்லூரி மீண்டும் திறக்கும் என்றும் 23ம் தேதி முதல்கல்லூரியின் இறுதியாண்டுத் தேர்வுகள் தொடங்கும் என்றும் கூறியுள்ளார்.
கல்லூரி திடீரென மூடப்பட்டதால் பிராக்டிகல்ஸ் மற்றும் மாடல் தேர்வுகள் அனைத்தும் பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டன. வகுப்புகளும்ஒழுங்காக நடக்கவில்லை. மாணவிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மரத்தடியில் எந்த வசதியும் இல்லாமல் வகுப்புகளை பேராசியர்கள்நடத்தி வருகின்றனர்.
இந் நிலையில் திடீரென தேர்வு நடக்கப் போவதாக கல்லூரி முதல்வர் அறிவித்துள்ளார். இதற்கு மாணவிகளிடையே கடும் எதிர்ப்புக்கிளம்பியுள்ளது. தங்களைத் திட்டமிட்டு அரசே பழிவாங்க நினைப்பது அதிர்ச்சி அளிப்பதாகவும் . எங்களது எதிர்காலத்தை நினைத்தாலேபயமாக உள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இக் கல்லூரியில் உள்ள கண் பார்வை இல்லாத மாணவிகள் சார்பில் பேசிய குணச்செல்வி என்ற மாணவி கூறுகையில், நாங்கள் ஸ்கிரைப்கள்உதவியுடன் தான் படித்து வருகிறோம்.
கல்லூரியை மூடிவிட்டதாக அறிவித்துவிட்டு திடீரென தேர்வை அறிவித்துள்ளார்கள். இதனால் எங்கள் சார்பில் ஸ்கிரைப்களை நியமிக்கக்கூட எங்களுக்கு கால அவகாசமோ, வாய்ப்போ இல்லாமல் போய்விட்டது என்றார்.
இதனால் தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கம்யூனிஸ்ட்களுக்கு அனுமதி மறுப்பு:
இந் நிலையில் ராணி மேரிக் கல்லூரி மாணவிகளைச் சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவிக்கச் சென்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்மாநிலச் செயலாளர் நல்லகண்ணு, மார்க்டிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏக்கள் அங்கு சென்றனர். ஆனால், அவர்களை கல்லூரிக்குள் போலீசார்நுழைய விடவில்லை.
இதையடுத்து வாயிலுக்கு வெளியில் இருந்தபடி மாணவிகளுடன் நல்லகண்ணு பேசினார். போராட்டத்துக்கு தனது முழு ஆதரவைத்தெரிவித்த அவர், மாணவர் சக்தியை கேவலப்படுத்திய எந்த அரசும் பிழைத்ததாக சரித்திரம் இல்லை என்றார்.
அவருடன் வந்த கட்சியின் தொண்டர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை நல்லகண்ணு அமைதிப்படுத்திஅழைத்துச் சென்றார்.
கலாமை சந்திக்க முடிவு:
இந் நிலையில் ராணி மேரிக் கல்லூரியின் முன்னாள் மாணவிகள் கூட்டம் இன்று மாலை நடக்கிறது. இதில் கல்லூரி இடிப்பை எதிர்த்துஜனாதிபதி அப்துல் கலாமைச் சந்தித்து மனு கொடுக்கவும் இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications