போராட்டத்தில் தமிழக மருத்துவ கல்லூரி மாணவர்கள்
சென்னை:
தனியார் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க அனுமதிக்கக் கூடாது என்று கோரி தமிழகம் முழுவதும் இன்றுஅரசு மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்துப் போராட்டம் நடத்தினர்.
தமிழகத்தின் பல்வேறு தனியார் மருத்தவக் கல்லூரிகளைத் தொடங்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு அரசுமருத்துவக் கல்லூரி மாணவர்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இன்று தமிழகம் முழுவதும் அவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்தனர். சென்னையில் மருத்துவக் கல்லூரி மாணவ,மாணவிகளும் இன்று மருத்துவக் கல்லூரி வளாகத்தில் திரண்டு போராட்டம் நடத்தினர். தனியார் மருத்துவக்கல்லூரிகளைத் தொடங்க அனுமதிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திஅப்போது அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.
எம்.பி.பி.எஸ். மாணவ, மாணவிகள் மட்டுமல்லாது மருத்துவப் பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவ, மாணவிகளும்இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இன்று முழுவதும் அவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்தனர்.
கோயம்புத்தூரிலும் 100 பயிற்சி மருத்துவர்கள் உள்ளிட்ட 610 மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள்கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரிக்குள்ளேயே போராட்டம் நடத்தினர்.
அதே போல மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அரசு ராஜாஜி மருத்துவமனை எதிரே கண்டன ஆர்ப்பாட்டம்நடத்தினர். திருச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ரயில் நிலையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம்வரை கண்டனப் பேரணி நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு தந்தனர்.
சேலம், தூத்துக்குடி, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகளும் இன்று வகுப்புக்களைப்புறக்கணித்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications