அயோத்தி: மேலும் 5 வாரங்கள் தோண்டிப் பார்க்க அனுமதி

Subscribe to Oneindia Tamil

லக்னெள:

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் கோவில் இருந்ததா என்பதைத் தோண்டிப் பார்க்கும் பணியைமேற்கொண்டுள்ள இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறைக்கு மேலும் 5 வார அவகாசத்தை லக்னெள நீதிமன்றம்வழங்கியுள்ளது.

முதலில் இங்கு 4 வாரத்துக்குள் அகழ்வாராய்ச்சிப் பணியை முடித்துவிட்டு நீதிமன்றத்திடம் அறிக்கை தாக்க செய்யவேண்டும் என்று தொல்பொருள் ஆய்வுத்துறைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இதுவரை நடந்த தோண்டும் பணியில் பூஜையில் பயன்படும் சங்குகள், பழங்கால அடுப்புகள், செங்கல்கள், அல்லாஎன எழுதப்பட்ட கல் மற்றும் சில சிறிய விஷயங்கள் தான் சிக்கின. கோவில் இருந்ததற்கான ஆதாரம் ஏதும்கிடைக்கவில்லை.

இதையடுத்து அங்கு மேலும் தோண்டிப் பார்க்க வேண்டியிருப்பதாகவும் இதனால் மேலும் இரண்டரை மாதஅவகாசம் தர வேண்டும் எனவும் தொல்பொருள் துறை நீதிமன்றத்திடம் அனுமதி கோரியது. முதலில் இதை ஏற்கமறுத்துவிட்ட நீதிமன்றம் இப்போது இந்த கால அவகாசத்தை மேலும் 5 வாரங்களுக்கு நீட்டிக்க முன் வந்துள்ளது.

இதுவரை நடந்துள்ள பணிகள் குறித்து வரும் 28ம் தேதி நீதிமன்றத்திடம் அறிக்கை தாக்க செய்ய வேண்டும்எனவும் தொல்பொருள்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இந்தத் தோண்டும் பணியில் முஸ்லீம்தொழிலாளர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தத் தோண்டும் பணியில் சுமார் 50 தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் கூட இஸ்லாமியர்இல்லை எனவும் திட்டமிட்டே முஸ்லீம்களை ஒதுக்கிவிட்டதாகவும் இஸ்லாமிய சட்டவாரியம் வழக்குத்தொடர்ந்தது. இதையடுத்து சில முஸ்லீம்களையும் சேர்க்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொல்பொருள்துறைஅமலாக்கவில்லை என்பதால் இப்போது மீண்டும இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+