மாணவிகளை ஸ்டாலின் தூண்டி விட்டார்: ஜெ.
சென்னை:
திமுக இளைஞரணிச் செயலாளர் ஸ்டாலின் உள்ளிட்ட அக்கட்சி எம்.எல்.ஏக்கள் சட்டப்படிதான்கைது செய்யப்பட்டுள்ளனர் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
ஸ்டாலின் தொடர்பாக ஜெயலலிதா இன்று சட்டசபையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில்,
ஸ்டாலின் கைது செய்யப்பட்டது சட்ட ரீதியிலாக எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கைதான். அதில் தவறுஏதும் இல்லை.
நேற்று முன்தினம் ராணி மேரி கல்லூரிக்குச் சென்ற ஸ்டாலின், பொன்முடி, ஹூசேன் மற்றும்அன்பழகன் ஆகிய திமுக எம்.எல்.ஏக்கள் அக்கல்லூரியின் வாயில் காவலரை மிரட்டியுள்ளனர்.பின்னர் அவரைத் தள்ளி விட்டு உள்ளே சென்றுள்ளனர்.
ஒரு காவலரைத் தாக்கி விட்டு கல்லூரிக்குள் நுழைவது அத்துமீறி செயல்தான். மேலும் உள்ளேசென்ற அவர்கள் அமைதியாகப் படித்துக் கொண்டிருந்த மாணவிகளிடம் போராட்டத்தைத்தொடர்ந்து நடத்துமாறு தூண்டி விட்டுள்ளனர்.
இது தொடர்பாக ராணி மேரி கல்லூரி முதல்வர் அளித்த புகாரின் அடிப்படையில் ஸ்டாலின்உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டனர். சட்டத்திற்கு உட்பட்டுத்தான் அவர்கள்கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராணி மேரி கல்லூரி இடிந்து விழும் நிலையில் இருப்பதால்தான் அதை இடித்து விட்டு அந்தஇடத்தில் புதிய தலைமைச் செயலகத்தைக் கட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
மேலும் அதற்கு அருகிலேயே ராணி மேரி கல்லூரிக்காக புதிய கட்டடம் எழுப்பப்பட உள்ளது.எனவே இக்கல்லூரியை இடிப்பதால் அதன் மாணவிகளின் படிப்பு எந்த வகையிலும்பாதிக்கப்படாது என்று அவ்வறிக்கையில் கூறியுள்ளார் ஜெயலலிதா.
-->












Click it and Unblock the Notifications