• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜெ. ஆட்சி நீடிக்கக் கூடாது: கருணாநிதி

By Staff
|

சென்னை:

தமிழக மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் சம்பாதித்துக் கொண்டுள்ள அதிமுக ஆட்சி இனியும்நீடிக்கக் கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

திமுக இளைஞரணிச் செயலாளர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதையும் கருணாநிதி கடுமையாகக்கண்டித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் நிருபர்களிடம் கூறுகையில்,

தமிழகத்தில் அனைத்துப் பிரிவு மக்களும் ஜெயலலிதா அரசின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.இந்த அரசு இனியும் நீடிக்க வேண்டுமா என்ற கேள்வி அனைவரின் மனத்திலும் எழுந்துள்ளது.

ராணி மேரி கல்லூரி இடிக்கப்படுவதை எதிர்த்துப் போராடி வரும் மாணவிகளை ஸ்டாலின் சென்றுசந்தித்ததில் என்ன தவறு இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை. அந்தக் கல்லூரிக்குள்ஸ்டாலின் "டிரஸ்பாஸ்" (அத்துமீறல்) செய்து போயுள்ளதாகப் போலீசார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர். அது என்ன தனியார் இடமா? பொது இடம்தானே?

ராணி மேரி கல்லூரியின் முன்னாள் மாணவியான 102 வயதுள்ள ஆலிவ் பால் கூட ஒரு சிலநாட்களுக்கு முன் கல்லூரிக்கு வந்தார். "டிரஸ்பாஸ்" செய்துவிட்டார் என்று அவரைத் தடுக்கமுடிந்ததா இந்தப் போலீசாரால்?

பொது இடமான ராணி மேரி கல்லூரிக்கு யார் வேண்டுமானாலும் போகலாம், வரலாம். இதைத்தடுப்பதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது. ராணி மேரி கல்லூரியின் முதல்வரை இடமாற்றம்செய்தது மிகத் தவறு.

ஸ்டாலின் கைதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்திய சுமார் 10,000 பேரைபோலீசார் கைது செய்துள்ளனர். திமுக மற்றும் திமுகவினர் மீது தொடரப்படும் எந்த வழக்கையும்நாங்கள் சட்டபூர்வமான வகையில் பயமின்றி சந்திப்போம்.

அதே நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்டாலின் உள்ளிட்ட 4 திமுக எம்.எல்.ஏக்களின் விடுதலைகோரி ஜாமீன் மனு எதையும் தாக்கல் செய்யப் போவதில்லை. சட்டப்படி இவ்வழக்கைநீதிமன்றத்தில் சந்திப்போம்.

தமிழக மக்களை ஈவு, இரக்கமின்றி கொடுமைப்படுத்தி வரும் அதிமுக அரசு இன்னும் நீடிக்கத்தான்வேண்டுமா? இந்த சர்வாதிகார ஆட்சியை விரட்டியடிக்க இதுதான் சரியான நேரம். அனைத்துக்கட்சிகளும் இணைந்து இந்த ஆட்சியை செயல்பட முடியாத நிலைக்குத் தள்ளுவோம்.

அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து விரைவில் அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும்கலந்து பேசிய பின்னர் திமுக முடிவெடுக்கும் என்றார் கருணாநிதி. அரசியல் சட்டத்தின் 356வதுபிரிவைப் பயன்படுத்தி அதிமுக அரசைக் கலைக்கக் கோருவீர்களா என்று ஒரு நிருபர் கேட்டதற்கு"மாட்டோம்" என ஒரே வார்த்தையில் பதிலளித்தார் கருணாநிதி.

"ஜனநாயகப் படுகொலை":

சட்டசபை காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் கூறுகையில்,

மக்கள் பிரதிநிதி என்ற முறையில்தான் ராணி மேரி கல்லூரி மாணவிகளைச் சென்று ஸ்டாலின்சந்தித்தார். சாதாரண மக்களின் பிரச்சனைகளை, குறைகளைக் கேட்கும் உரிமை ஒவ்வொருஎம்.எல்.வுக்கும் உண்டு.

அந்த வகையில்தான் மாணவிகளிடம் ஸ்டாலின் குறைகளைக் கேட்டறிந்தார். அவ்வாறுகேட்டதற்காக அவரைக் கைது செய்துள்ளனர். இது ஜனநாயகப் படுகொலை என்றார் எஸ்.ஆர்.பி.

ராமதாஸ் கண்டனம்:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவிகளின் போராட்டம்வலுவடைந்து வருவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துதான் ஸ்டாலின் போன்றவர்களை தமிழக அரசுகைது செய்துள்ளது.

ஸ்டாலின் மீது கொலை முயற்சி வழக்குப் போட்டு கைது செய்திருப்பது அரசியல் பழி வாங்கும்செயலாகும். தங்களுடைய பழி வாங்கும் நோக்கத்திற்கு காவல் துறையினரை அநியாயமாகப்பயன்படுத்தி வருகிறது அதிமுக அரசு என்று கூறியுள்ளார்.

பாமக தலைவர் ஜி.கே. மணி கூறுகையில், அதிமுக ஆட்சியில் எப்போதுமே பேச்சுரிமைமறுக்கப்பட்டு வருகிறது. ஸ்டாலின் மீது பொய் வழக்கு போட்டு அவரைக் கைது செய்துள்ளனர்.கேட்டை உடைத்துக் கொண்டு அடாவடியாக அவரைக் கைது செய்துள்ளது கண்டிக்கத்தக்கதுஎன்றார்.

"நள்ளிரவு கைதுகளில் நம்பிக்கை":

தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் கூறுகையில், நள்ளிரவு கைதுகளில் நம்பிக்கைவைத்துள்ள ஜெயலலிதா ஜனநாயகத்தின் மீதும் கொஞ்சம் நம்பிக்கை வைக்கலாம்.

கருணாநிதி, ஸ்டாலின், வெள்ளையன் என எல்லோரையும் மிட்- நைட்டில் கைது செய்து வருகிறார்.சினிமாவில்மிட்-நைட் மசாலாவை அறிமுகம் செய்த ஜெயலலிதா இப்போது மிட்-நைட் கைதுகளை நடத்தி வருகிறார் என்றார்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X