நள்ளிரவில் பறந்த "அந்த" 46 போன் கால்கள்.. பிரபல தெலுங்கு நடிகை தற்கொலையில் உள்ள 7 மெகா கேள்விகள்!
டெல்லி: மாடல் மற்றும் தெலுங்கு நடிகையான ட்விஷா சர்மாவின் மர்ம மரண வழக்கில், ஒவ்வொரு நாளும் அடுக்கடுக்கான புதிய திருப்பங்களும் அதிர்ச்சித் தகவல்களும் வெளியாகி வருகின்றன. 33 வயதான ட்விஷாவின் மரணம் தற்கொலை தான் என்று பிரேதப் பரிசோதனை அறிக்கை கூறினாலும், அவரது உடம்பில் இருந்த காயங்கள் சர்ச்சையைக் கிளப்பியே வருகிறது.
கடந்த மே 12ம் தேதி போபாலில் உள்ள தனது கணவர் வீட்டில் ட்விஷா சடலமாக மீட்கப்பட்டார். அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் உயிரிழந்து ஒரு வாரத்திற்கும் மேலாகிவிட்டது. இன்னும் பல கேள்விகளுக்குப் பதில் இல்லை.. பல சர்ச்சைகள் கேள்விகள் இந்த வழக்கைச் சுற்றி இருந்து கொண்டே தான் இருக்கிறது.

ஒரு பக்கம் ட்விஷாவின் கணவரான வழக்கறிஞர் சமர்த் சிங் இன்னும் தலைமறைவாகவே இருக்கிறார். இன்னொரு பக்கம் ட்விஷாவுக்கு கஞ்சா பயன்படுத்தும் பழக்கம் இருந்ததாக அவரது மாமியார் குற்றஞ்சாட்டுகிறார். இது ஒரு பக்கம் இருக்க ட்விஷாவின் உடலையும் அவரது குடும்பத்தினர் வாங்க மறுத்துவிட்டனர். இதனால் இந்த விவகாரம் நாளுக்கு நாள் பெரிதாக வெடித்து வருகிறது. இந்த விவகாரத்தில் இன்னும் ஏழு முக்கியமான கேள்விகள் உள்ளன. அவை குறித்து நாம் பார்க்கலாம்!
1. மரணத்திற்கு முன் என்ன நடந்தது?
வீட்டின் சிசிடிவி காட்சிகளின்படி, மே 12ம் தேதி இரவு 7:20 மணியளவில் ட்விஷா மாடிக்குச் செல்வது பதிவாகியுள்ளது. ஆனால், கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து தான் அவரது உடல் கீழே கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த 60 நிமிடங்களில் மொட்டை மாடியில் என்ன நடந்தது? வீட்டில் யாரெல்லாம் இருந்தார்கள்? ஏன் உடனடியாக அவருக்கு உதவி கிடைக்கவில்லை?
2. மருத்துவமனைக்குச் செல்லவில்லை
ட்விஷாவை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதில் திட்டமிட்டே காலதாமதம் செய்யப்பட்டதாக அவரது பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.. படிக்கட்டுப் பகுதியில் வைத்து ட்விஷாவுக்கு தாங்கள் சிபிஆர் செயற்கை சுவாசம் கொடுத்ததாகவும், அது தோல்வியடைந்ததாகவும் கணவர் தரப்பு கூறுகிறார்.. ஆனால் உண்மைகளை மறைக்கவே இந்த நாடகம் நடந்ததா என்று சந்தேகத்தைக் கிளப்புகிறார்கள்.
3. மரணத்திற்கு முன் 'மெசேஜ்கள்'
உயிரிழப்பதற்குச் சில நாட்களுக்கு முன்பே, தனது தாயாருக்கு ட்விஷா அனுப்பிய வாட்ஸ்அப் மெசேஜ்களில், கணவர் வீட்டில் அனுபவித்து வரும் கடுமையான மன உளைச்சல்களை விவரித்துள்ளார். அவர் தொடர் எமோஷனல் டார்ச்சருக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தை இது எழுப்புகிறது.
4. தடையங்கள் அழிக்கப்பட்டதா?
வழக்கின் மிக முக்கியக் குளறுபடியே இங்கு தான் அரங்கேறியுள்ளது. ட்விஷா தூக்கிடப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் நைலான் கயிறு, பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவக் குழுவிடம் ஒப்படைக்கப்படவில்லை.. அதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால், ட்விஷாவின் கழுத்தில் இருந்த காயங்களுக்கும், அந்தக் கயிற்றிற்கும் இடையே உள்ள தொடர்பை மருத்துவர்களால் ஒப்பிட முடியாமல் போனது. இது தடையங்களை அழிக்க நடந்த சதியா என்ற கேள்வி எழுந்துள்ளது
5. முரண்பாடுகள்
போபாலில் நடத்தப்பட்ட முதல் பிரேதப் பரிசோதனை அறிக்கை முழுமையான உண்மைகளைத் தரவில்லை எனப் பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர். ட்விஷாவின் உடலில் தாக்குதலால் ஏற்பட்ட காயங்களும், பிறப்புறுப்பு சார்ந்த காயங்களும் இருந்துள்ளன. இருப்பினும், அதற்குப் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெளிவான பதில்கள் இல்லை.
6. இது தற்கொலையா?
இந்த வழக்கின் மிக பெரிய கேள்வி இதுதான். ட்விஷா எதற்காக இந்த முடிவை எடுத்தார்.. புகுந்த வீட்டின் வரதட்சணைக் கொடுமைகளும் அராஜகங்களும் தான் அவரை இந்த இந்த விபரீத முடிவுக்குத் தள்ளியதா என்றும் கேள்வி எழுந்துள்ளது.
7. மாமியார் பேசிய 46 கால்கள்!
ட்விஷா இறந்த அடுத்த சில நிமிடங்களிலேயே, அவரது மாமியாரும் ஓய்வுபெற்ற நீதிபதியுமான கிரிபாலா சிங், சுமார் 46 பேரை தொட்பு கொண்டு பேசியதாக ட்விஷாவின் குடும்பத்தினர் கூறியுள்ளனர். நள்ளிரவில் அவர் அவசரமாகத் தொடர்பு கொண்டதன் மர்மம் என்ன? என்பதும் மிக முக்கிய கேள்வியாக இருக்கிறது.
-
மனைவி - மகனை கொன்று தற்கொலை செய்த ஜவுளிக்கடை ஓனர்! மகளிர் இலவச பஸ் பயண திட்டத்தால் விபரீத முடிவாம் -
சிதம்பரத்தில் ஷாக்! உல்லாசத்திற்கு வர மறுத்த இளம்பெண்ணை கொன்ற முதியவர் கைது! -
கொடூரம்.. பெரம்பூர் ஸ்டேஷனில் சூட்கேஸில் இருந்த உடல்.. தலையை செங்கல்பட்டு ஏரியில் மீட்ட போலீசார்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு!












Click it and Unblock the Notifications