வாணியம்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தை ஆடி போக வைத்த ஈஸ்வரி
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் இரண்டு வாரமாக பத்திரப்பதிவு செய்து தரவில்லை என கூறி கூலித் தொழிலாளி தம்பதியினர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள அரசினர் தோட்டம் வளாகத்தில் அமைந்துள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்வதற்கு ஏராளமானோர் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.

பொதுமக்கள் தங்கள் வீடுகள், நிலம், காலி மனைகள், பத்திரப்பதிவு மற்றும். அடமானம் ஏற்கனவே அடமானம் போடப்பட்ட பத்திரங்களை மீட்கவும், வில்லங்கச் சான்றிதழ்கள் உயில்கள், தடையில்லா சான்றுகள் உள்ளிட்ட பல்வேறு பத்திர பதிவுகள் சார்பதிவாளர் அலுவலகத்தில் செய்கின்றனர் .
இதில் இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பத்திர பதிவுக்கு செல்லும் ஆவணங்கள் நிலுவையில் வைக்கப்பட்டு ஆவணங்களில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தும் அலைக்கழிக்கப்படுவதாகவும், குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இடைத்தரகர்கள் மூலம் கொண்டு செல்லப்படும் ஆவணங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு பணிகள் விரைவாக முடிக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகளை சிலர் எழுப்பி வருகிறார்கள்.

இந்நிலையில் நேற்று திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பத்தாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி ஈஸ்வரி (45), என்பவர் தனக்கு சொந்தமான 1300 சதுர அடி கொண்ட இடத்தை கடந்த 2023ம் ஆண்டு வேறொரு நபருக்கு விற்பனை செய்துள்ளார்களாம். இதை தொடர்ந்து ஈஸ்வரி தற்போது அதே நபரிடம் வாங்கிய தொகையை கொடுத்துவிட்டு மீண்டும் அந்த இடத்தை தன்னுடைய பெயருக்கு பத்திரம் செய்வதற்காக கடந்த வாரம் சார்பதிவாளர் அலுவலகம் சென்றுள்ளார். ஆனால் சார் பதிவாளர் அலுவலகத்தில் ஆவணங்களில் திருத்தம் செய்ய வேண்டும் என சார்பதிவாளர் ஊழியர்கள் தொடர்ந்து இரண்டு வாரமாக அலைக்கழித்து வருவதாக குற்றம்சாட்டினார். அத்துடன் சார்பதிவாளர் அலுவலகம் நுழைவாயில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மேலும் சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளர் சம்மதம் தெரிவித்தாலும் கூட அதற்கு கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மற்றும் ஹெட் கிளாக் சம்மதம் தெரிவிக்கவில்லை என ஈஸ்வரி குற்றச்சாட்டினார். இதுகுறித்து துறை சார்ந்த உயர் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications