ராணி மேரிக் கல்லூரி விவகாரம்: நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் மோதல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

ராணி மேரிக் கல்லூரி இடிப்பு, ஸ்டாலின் மற்றும் எதிர்க் கட்சி எம்.எல்.ஏக்கள் கைது ஆகிய விவகாரங்கள் இன்றுநாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.

இந்த விவகாரத்தை இன்று திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் கிளப்பினர்.இதற்கு அதிமுக எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இரு தரப்பினரும் ஒருவரை நோக்கி ஒருவர் விரலை நீட்டி மிக மரியாதையான வார்த்தைகளால் அர்ச்சித்துக்கொண்டனார். ஒன்னும் புரியாமல் இந்தி எம்.பிக்களும் அமைச்சர்களும் முழித்தனர்.

முதலில் மாநிலங்களவையில் இந்தப் பிரச்சனையை திமுக உறுப்பினர் விடுதலை விரும்பி கிளப்பினர். வரலாற்றுச்சின்னமான ராணி மேரிக் கல்லூரி இடிக்கப்படாது என தமிழக அரசு உறுதி அளிக்க வேண்டும். அந்தஉறுதிமொழியை மத்திய அரசு கேட்டுப் பெற வேண்டும் என்றார்.

ஆனால், ஒரு மாநிலத்தின் பிரச்சனையை, அதுவும் நீதிமன்றத்தில் இருக்கும் ஒரு பிரச்சனையை இங்கு பேசக்கூடாது என அதிமுக எம்.பியான பி.ஜி. நாராயணன் கூறினார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும்வாக்குவாதம் எழுந்தது.

திமுக உறுப்பினர்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கட்சி எம்.பிக்களும் வாதானடினர். இறுதியில் தமிழக அரசைக்கண்டித்து மாநிலங்களவையில் இருந்து திமுக உறுப்பினர்களும், மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி.மோகனும் வெளிநடப்பு செய்தனர்.

நாடாளுமன்ற வாயிலில் நின்று தமிழக அரசை எதிர்த்து இவர்கள் கோஷம் போட்டனர்.

மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் மணிசங்கர் ஐயர் இந்த விவகாரத்தைக் கிளப்பினார். சட்டமன்றத்தில் இருந்துவெளியேற்றப்பட்ட திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை ஜெயலலிதா கைது செய்ய உத்தரவிட்டது ஜனநாயகத்திற்குவிழும்த மரண அடி என்றார். அவருக்கு அதிமுக எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்குவாக்குவாதம் வெடித்தது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+