சென்னை வந்த விமானத்தில் "சார்ஸ்" நோயாளி?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஜப்பான், சிங்கப்பூருக்குச் சென்று விட்டு விமானத்தில் வந்த சென்னையைச் சேர்ந்த ஒருவருக்கு"சார்ஸ்" நோய் அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்து அவர் சென்னை மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் இத்தகவலை மருத்துவக் கல்வி இயக்குநர் மறுத்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்த விஜய் சுவாமிநாதன் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்குச்சென்று விட்டு நேற்று இரவு சென்னை திரும்பினார்.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த அனைத்துப் பயணிகளையும் சென்னை விமானநிலையத்தில் உள்ள மருத்துவக் குழுவினர் "சார்ஸ்" நோய் இருக்கிறதா என்பதைக் கண்டறியும்பொருட்டு பரிசோதனை செய்தனர்.

அப்போதுதான் 60 வயதான விஜய் சுவாமிநாதனுக்கு "சார்ஸ்" நோய்க்கான அறிகுறிகள்இருப்பதாகக் கண்டறியப்பட்டது. கடுமையான காய்ச்சல் இருப்பதாக அவர் டாக்டர்களிடம்கூறியதைத் தொடர்ந்துதான் அவரைத் தீவிரமாகப் பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு "சார்ஸ்" நோய்இருப்பதற்கான அறிகுறிகளைக் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அவர் பத்திரமாகத் தனி வாகனத்தில் வட சென்னையின் தண்டையார்பேட்டையில்உள்ள ஒரு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருக்குத் தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் இந்தத் தகவலை மருத்துவக் கல்வி இயக்குநர் ரவீந்திரநாத் மறுத்துள்ளார்.தண்டையார்பேட்டை மருத்துவமனையில் "சார்ஸ்" நோய் தாக்கிய யாரும் சேர்க்கப்படவில்லைஎன்றும் அவர் தெரிவித்தார்.

சீனாவில் மேலும் 2 பேர் சாவு:

இதற்கிடையே சீனாவில் மேலும் 2 பேர் "சார்ஸ்" நோய்க்கு பலியாகியுள்ளனர்.

சீனாவில்தான் தோன்றியதாகக் கருதப்படும் இந்த நோய் காரணமாக அந்நாட்டில் மட்டும் இதுவரை55 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் 1,290 பேர் "சார்ஸ்" நோய் தாக்கப்பட்டுள்ளனர்.

"இன்போசிஸ்" நிறுவனம் பாதிப்பு:

இதற்கிடையே "சார்ஸ்" நோய் அச்சம் காரணமாக தங்கள் நிறுவனத்திற்கு "க்ளையண்ட்டுகள்" வருகைகுறைந்து விட்டதாக "இன்போசிஸ்" சாப்ட்வேர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

"சார்ஸ்" நோய் காரணமாக பல "க்ளையண்டுகள்" தங்கள் இந்தியப் பயணத்தை ரத்து செய்துவிட்டனர் என்று "இன்போசிஸ்" நிறுவனத்தின் தலைவர் நந்தன் நீல்கானி இன்று நிருபர்களிடம்தெரிவித்தார்.

மேலும் ஹாங்காங்கில் உள்ள தங்கள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 4 சாப்ட்வேர் இன்ஜினியர்கள்"சார்ஸ்" நோய் அச்சம் காரணமாக இந்தியாவுக்குத் திரும்பி விட்டதாகவும், சிங்கப்பூர் மற்றும்ஹாங்காங்கிற்கு செல்ல வேண்டிய பல சாப்ட்வேர் இன்ஜினியர்கள் தங்கள் பயணத்தை நிறுத்திவைத்துள்ளதாகவும் "இன்போசிஸ்" நிறுவனம் தெரிவித்துள்ளது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+