ராணி மேரி கல்லூரியில் அத்துமீறி நுழைந்ததாக ஸ்டாலின் கைது: கடலூர் சிறையில் அடைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ராணி மேரி கல்லூரியில் அத்துமீறி நுழைந்ததாகப் புகார் கூறி சென்னை மாநகர முன்னாள் மேயரும்திமுக இளைஞரணிச் செயலாளருமான ஸ்டாலினை நள்ளிரவில் போலீசார் கைது செய்தனர்..

நேற்று முன்தினம் ராணி மேரி கல்லூரிக்குச் சென்ற ஸ்டாலின் அங்கு போராட்டம் நடத்தி வந்தஅக்கல்லூரி மாணவிகளைச் சந்தித்தார். கல்லூரியை இடிக்கக் கூடாது என்று போராட்டம் நடத்தும்அவர்களுக்கு திமுக ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்தார்.

பின்னர் அவர் கல்லூரியை விட்டு வெளியே செல்லும்போது போலீசார் அவரைத் தடுத்தனர்.கல்லூரிக்குள் அத்துமீறி ஸ்டாலின் நுழைந்ததாகப் புகார் கூறினர். இதைத் தொடர்ந்துபோலீசாருக்கும் திமுகவினருக்கும் இடையே சிறிதுநேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பின்னர் ஸ்டாலினை ஒருவழியாக அப்போதைக்குப் போலீசார் விட்டு விட்டனர். அத்துடன்பிரச்சனை முடிந்தது என்று அனைவரும் நினைத்தனர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு சுமார் 11.30 மணியளவில் ஸ்டாலின் அவருடைய வேளச்சேரிவீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார். ராணி மேரி கல்லூரிக்குள் அத்துமீறி அவர் நுழைந்ததாகப்புகார் கூறி அவரைப் போலீசார் கைது செய்து கொண்டு சென்றனர்.

பின்னர் அவர் சென்னை-சைதாப்பேட்டை 13வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதிவேங்கடவரதனின் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கநீதிபதி வேங்கடவரதன் உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து ஸ்டாலின் சென்னை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் திடீரெனஅங்கிருந்து கடலூர் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+