சிதம்பரம் பாமக எம்.பி. வெற்றி செல்லும்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை:
சிதம்பரம் தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி எம்.பியாக பொன்னுச்சாமி வெற்றி பெற்றது செல்லும்என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 1999ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில்போட்டியிட்டு வெற்றி பெற்றார் பொன்னுச்சாமி.
இந்நிலையில் பொன்னுச்சாமி வெற்றி பெற்றது செல்லாது என்று கோரி அதே தொகுதியில் அவரைஎதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்த விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர்திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
சென்னையில் உள்ள வாக்காளர் பட்டியலில் பொன்னுச்சாமியின் பெயர் உள்ளதால் அவர் சிதம்பரம்தொகுதியில் போட்டியிட முடியாது என்று தன் மனுவில் திருமாவளவன் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வழக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக உயர் நீதிமன்ற நீதிபதி பி. சிவசுப்பிரமணியம் முன்பாகநடைபெற்று வந்தது.
இந்நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. பொன்னுச்சாமியின் வெற்றியைத் தடைசெய்ய முடியாது என்று நீதிபதி சிவசுப்பிரமணியம் தீர்ப்பளித்தார்.
-->












Click it and Unblock the Notifications