சென்னையில் கோவில் உண்டியலை உடைத்து ரூ.10,000 கொள்ளை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் பிள்ளையார் கோவில் உண்டியலை உடைத்து அதிலிருந்த ரூ.10,000 பணத்தையாரோ கொள்ளையடித்துச் சென்று விட்டனர்.
சென்னையை அடுத்த நந்தம்பாக்கத்தில் சர்வ ஸித்தி விநாயகர் கோவில் உள்ளது. நேற்று நள்ளிரவு12 மணிக்கு மேல் இந்தக் கோவிலுக்குள் கொள்ளைக் கும்பல் புகுந்துள்ளது.
பின்னர் அங்குள்ள உண்டியலை உடைத்து அதிலிருந்த பணம், சில்லரை அனைத்தையும் எடுத்துக்கொண்டு அந்தக் கொள்ளைக் கும்பல் ஓடிவிட்டது.
இன்று காலை கோவிலுக்குள் சென்று பார்த்தபோதுதான் உண்டியல் உடைக்கப்பட்ட விவரம் தெரியவந்தது.
திருவிழா காலமாகையால் கோவிலில் நன்றாகக் கூட்டம் வந்து கொண்டிருந்ததாகவும், எனவேகொள்ளை போன பணத்தின் மதிப்பு ரூ.10,000க்கும் அதிகமாக இருக்கும் என்றும் கோவில்நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாகப் போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
-->












Click it and Unblock the Notifications