விரும்பும் எல்லோரும் என்ஜினியரிங் சீட் கிடைக்கும்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.இ. தொழில்கல்லூரிகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு இன்று நடந்தது.

இதில் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 284 நுழைவுத் தேர்வு மையங்களில் 1,40,327 மாணவ,மாணவிகள் தேர்வெழுதினர். சென்னையில் மட்டும் அண்ணா பல்கலைக்கழகம் உள்பட 53 மையங்கள்அமைக்கப்பட்டிருந்தன.

விடைத்தாள்கள் கம்ப்யூட்டர் ஸ்கேனிங் முறையில் இம் மாதம் 17ம் தேதி திருத்தப்பட உள்ளன. இதற்காக எல்லாஊர்களில் இருந்து விடைத் தாள்கள் சென்னைக்குக் கொண்டுவரப்படும். தவறுகள் ஏற்படுவதைத் தவிர்க்கஇந்தமுறை டபுள் ஸ்கேனிங் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர்பாலகுருசாமி நிருபர்களிடம் கூறினார்.

மே இரண்டாவது வாரத்தில் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. கல்லூரிகளில் சேருவதற்கான சிங்கிள் விண்டோகவுன்சிலிங் ஜூன் 23ம் தேதி தொடங்கும். இந்த ஆண்டு பி.இ. வகுப்பில் சேர விண்ணப்பிக்கும் அனைவருக்குமேசீட்கள் கிடைக்கும் எனவும் பாலகுருசாமி கூறினார்.

தமிழகத்தில் பி.இ. இடங்கள் மிக அதிகமான அளவில் உள்ளன. இதனால் அந்தப் படிப்பில் சேர விரும்பும்அனைவருக்கும் சிங்கிள் விண்டோ கவுன்சிலிங்கிலேயே இடம் கிடைத்துவிடும். இதனால் மாணவ, மாணவிகள்கவலையே பட வேண்டாம்.

மாணவர்கள் சேர்க்கையில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் விதிகள் பின்பற்றப்படாது. அண்ணாபல்கலைக்கழகம் தனது விதிமுறைகளின் கீழ் தான் மாணவர் தேர்வில் ஈடுபடும். பி.சி. எம்.பி.சி., எஸ்.சி, எஸ்.டி.மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டு முறையும் தவறாமல் கடைபிடிக்கப்படும்.

பி.இ. படிப்பில் எத்தனை மாணவர்களை சேர்ப்பது என்பது குறித்து வரும் 17ம் தேதி கவுன்சிலிங் குழுவின் கூட்டம்நடக்கவுள்ளது என்றார் பாலகுருசாமி.

கடந்த சில ஆண்டுகளாகவே பி.இ. சீட்கள் பல கல்லூரிகளில் ஆயிரக்கணக்கில் காலியாக இருந்து வருகின்றன.இதைத் தவிர்க்க இந்த ஆண்டு மிகக் குறைந்த மதிப்பெண் இருந்தாலும் கூட சீட்களை ஒதுக்கப்படும். ஆனால்,மதிப்பெண் குறையக் குறைய அதிக பணம் கொடுத்து பேமெண்ட் சீட் வாங்க வேண்டியிருக்கும்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+