அமெரிக்க தாக்குதலில் சதாமின் சகோதரர் சாவு

Subscribe to Oneindia Tamil

பாக்தாத்:

பாக்தாத் அருகே அமெரிக்க விமானங்கள் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் அதிபர் சதாம் ஹூசேனின்சகோதரர் பர்சான் இப்ராகிம் ஹூசேன் கொல்லப்பட்டார்.

ரமாதி என்ற இடத்தில் உள்ள மாளிகை மீது நடந்த தாக்குதலில் இவர் கொல்லப்பட்டதாக அமெரிக்கப் புலனாய்வுஅமைப்புகள் கூறியுள்ளன. இவர் சதாம் ஹூசேனின் ஆலோசகராகவும் உளவுப் பிரிவுத் தலைவராகவும்இருந்தவர்.

ஈராக் தூதர் விலகல்:

இந் நிலையில் ஐ.நாவுக்கான ஈராக்கியத் தூதர் முகம்மத் அல் தெளரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அபுதாபி டிவிக்கு அவர் அளித்த பேட்டியில், எனது நாட்டுக்குள் ஊடுவிய நாட்டுக்குள் (அமெரிக்கா) தொடர்ந்துவாழ நான் விரும்பவில்லை. நான் ஐ.நாவில் சுதந்திரமாகப் பணியாற்ற அமெரிக்கா அனுமதிக்காது. எனதுநாட்டில் நடக்கும் சூறையாடல்கள், அழிவுகளைப் பார்த்தால் நெஞ்சம் பதறுகிறது (இதைச் சொல்லும்போதுஉணர்ச்சிவசப்பட்டு அழுதார்) என்றார்.

பின்னர் அவர் பாரிஸ் வழியாக சிரியாவுக்குக் கிளம்பினார். சிரியா வழியாக அவர் ஈராக் செல்லத்திட்டமிட்டுள்ளார். இவரது குடும்பம் ஈராக்கில் தான் உள்ளது. ஆனால், போர் தொடங்கியவுடன அவர்களுடானதகவல் தொடர்பையும் இழந்துவிட்டார். அவர்களது நிலை என்ன என்று கூட எனக்குத் தெரியவில்லை என்றார்.

ஐ.நாவில் அதிபர் சதாம் ஹூசேனுக்காக தொடர்ந்து அமெரிக்காவுடன் மோதி வந்தார் அல்தெளரி.

ஈராக்கிய எதிர்க் கட்சிகள் கூட்டம்:

இந் நிலையில் ஈராக்கில் அடுத்த ஆட்சியை அமைப்பது குறித்து ஈராக்கிய எதிர்க் கட்சிகளுடன் ஆலோசனைநடத்தப் போவதாக அமெரிக்க அறிவித்துள்ளது. சதாமுக்கு பயந்து வெளிநாடுகளில் வசித்து வரும் அனைத்துஎதிர்க் கட்சிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என அமெரிக்கா கூறியுள்ளது.

ஈராக்கின் தென் பகுதியில் உள்ள நசிரியா நகரில் வரும் செவ்வாய்க்கிழமை இக் கூட்டம் நடக்கிறது.

உலக வங்கி உதவி:

ஈராக்கில் மறுகட்டமைப்புப் பணிகளுக்கு போதிய நிதி வழங்க உலக வங்கியும், சர்வதேச நிதியமும் முன்வந்துள்ளன. இது குறித்து இந்த இரு அமைப்புகளின் அதிகாரிகளும் நேற்று வாஷிங்டனில் சந்தித்துப் பேசினர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+