கடலுக்குள் நின்று போராட்டம் நடத்திய ராமேஸ்வரம் மீனவர்கள்
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரிராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குள் நின்று நூதனப் போராட்டம் நடத்தினர்.
கடந்த மார்ச் மாதம் மண்டபம் பகுதியிலிருந்து ஏராளமான மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.அவர்களில் நூற்றுக்கணக்கானோரை இலங்கை மீனவர்களும் கடற்படையினரும் கடத்திச் சென்றனர்.
பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். ஆனால், இன்னும் 27 பேர் இலங்கை சிறையிலேயே உள்ளனர்.அவர்களை உடனடியாக மீட்கக் கோரி ராமேஸ்வரம், மண்டபம் பகுதி மீனவர்கள் போராடி வருகின்றனர்.
இந் நிலையில் ராமேஸ்வரம் அருகில் உள்ள அக்னி தீர்த்தம் கடல் பகுதிக்குள் சென்ற 50க்கும் மேற்பட்ட மீனவர்கள்கடலில் நின்றபடி போராட்டம் நடத்தினர்.
-->












Click it and Unblock the Notifications