நக்கீரன் கோபால் திடீர் கைது: ஜெ. நடவடிக்கை
சென்னை:
நக்கீரன் வார இதழ் ஆசிரியர் கோபால் நேற்றிரவு திடீரென கைது செய்யப்பட்டார்.
சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கு உதவியதாக ஏற்கனவே கோபால் கைது செய்யப்பட்டார். போலீஸ் உளவாளியைவீரப்பன் கொலை செய்த விஷயத்திலும் இவரைக் கைது செய்ய போலீசார் முயன்று வந்தனர்.
ஆனால், நீதிமன்றத்தின் ஜாமீன் பெற்று தப்பி வந்தார். இந் நிலையில் மீண்டும் அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார்கைது செய்துள்ளனர்.
வீரப்பனுக்கு திமுக ஆட்சியில் பல கோடி கைமாறியதாக கர்நாடக மாநில முன்னாள் டி.ஜி.பி. தினகர் எழுதியுள்ளபுத்தகம் தொடர்பாக விசாரணைக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். ராஜ்குமாரை மீட்க வீரப்பனுக்குகருணாநிதியிடம் இருந்து கோபால் தான் பணத்தை எடுத்துச் சென்றார் என்று தினகர் கூறியுள்ளார்.
இந்த வழக்கில் கருணாநிதியிடமும் விசாரணை நடக்கும் என ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இந் நிலையில் நக்கீரன் கோபாலை வெள்ளிக்கிழமை இரவு போலீசார் திடீரென கைது செய்துள்ளனர்.
ராயப்பேட்டை ஜாம்பஜாரில் அருகே ஜாபர்கான் சாலையில் உள்ள நக்கீரன் அலுவலகத்தை விட்டு இரவு 9.30மணிக்கு வெளியே வந்த கோபால் தனது காரில் ஏறியதும் கோபிசெட்டிப்பாளையத்திலிருந்து வந்திருந்த சிபிசிஐடிபோலீஸார் வழிமறித்தனர். சாதாரண உடையில் அவர்கள் இருந்தனர்.
அவரைக் கைது செய்வதாகவும், தங்களுடன் வருமாறும் அவர்கள் அழைத்தனர். என்ன காரணத்திற்காக என்னைக்கூப்பிடுகிறீர்கள்? எதற்காக கைது செய்கிறீர்கள்? எனது வக்கீலிடம் நான் பேச வேண்டும், அவர் வந்த பிறகு எங்குவேண்டுமானாலும் அழைத்துச் செல்லுங்கள் என்று கோபால் கூறினார்.
ஆனால், அதை அனுமதிக்காத போலீஸார் கோபாலை வலுக்கட்டாயமாக தங்களுடன் அழைத்துச் சென்றனர்.
சென்னை சிபிசிஐடி தலைமை அலுவலகத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட கோபாலிடம் விடிய விடிய விசாரணைநடந்தது. இன்று காலை 7 மணிக்கு அவரை சைதாப்பேட்டை 6-வது நீதிமன்ற நீதிபதி சாம்பசிவம் வீட்டிற்குஅழைத்துச் சென்ற போலீஸார் அங்கு அவறை ஆஜர்படுத்தினர்.
நீதிபதி சாம்பசிவம் கோபாலை 25 நாட்கள் நீதிமன்றக்காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர்சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பத்திரிக்கையாளர்கள்முற்றுகை:
நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்ட சம்பவம் அறிந்ததும் இரவிலேயே சிபிசிஐடி அலுவலகத்தில் ஏராளமானபத்திரிக்கையாளர்கள் கூடிவிட்டனர். என்ன காரணத்திற்காக கோபால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதைத்தெரிந்து கொள்ள விரும்புவதாக அவர்கள் கோரினர்.
ஆனால் காரணத்தைக் கூற சிபிசிஐடி போலீஸார் மறுத்துவிட்டனர். இதைத் தொடர்ந்து கோபாலைசட்டவிரோதமாக கைகது செய்துள்ளீர்கள். அவரை உடனே விடுவிக்க வேண்டும் என்று கோரினர். இதனால்போலீசாருக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
-->












Click it and Unblock the Notifications