ஈராக் முழுவதும் கொலை- கொள்ளை: வேடிக்கை பார்க்கும் அமெரிக்க படைகள்
பாக்தாத்:
ஈராக்கில் சூறையாடல்கள் மற்றும் கொள்ளைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் பொது மக்களுக்கும் இடையேஆங்காங்கே மோதல்கள் நடந்து வருகின்றன. இதில் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதனால் நாடு முழுவதும் அரசு அலுவலகங்கள், வங்கிகள், கடைகள், கல்லூரிகள், வீடுகள் உடைக்கப்பட்டுபணமும் பொருள்களும் கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன. இதை அமெரிக்கா தடுக்காததால் பொது மக்களேஆங்காங்கே சாலைகளில் தடுப்புகளை உருவாக்கி கொள்ளைக் கும்பல்களைத் தாக்கி வருகின்றனர்.
சாலைகளில் வரும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனையிடம் பொது மக்கள் கொள்ளைக் கும்பல்களைஅடித்தும் சுட்டும் கொன்று வருகின்றனர். இதனால் நாடு முழுவதும் பெரும் அபாயகரமான சூழ்நிலை நிலவுகிறது.
பல நகரங்களில் மோதல்களும் கொலைகளும் தொடர்ந்தவண்ணம் உள்ளன.
இது குறித்து அமெரிக்கப் பாதுகாப்புத்துறை அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பீலட் கூறுகையில்,
ஈராக்கில் இப்போது ஆட்சி மாற்றம் நடந்து கொண்டுள்ளது. வன்முறையில் இருந்து ஜனநாயகத்துக்கு அந்த நாடுமாறிக் கொண்டிருக்கிறது. இந்த சமூக மாற்றத்தில் கொள்ளைகளும் சூறையாடல்களும் ஒரு அங்கம் தான். இதைப்போய் கேரமாக்கள் படம் பிடித்து அய்யோ கொள்ளை நடக்கிறது.. சட்டம் ஒழுங்கு இல்லை என்று புலம்புவதுவேடிக்கையாக உள்ளது. இந்த நாட்டுக்கு சுதந்திரத்தை வாங்கித் தந்துள்ளோம். அதைப் பாராட்ட உங்களுக்கு(பத்திரிக்கைகளுக்கு) மனம் வரவில்லை என்றார்.
-->












Click it and Unblock the Notifications