காஞ்சிபுரம் அருகே 2 சாலை விபத்துக்கள்: 6 பேர் பலி
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே ஏற்பட்ட 2 சாலை விபத்துக்களில் 6 பேர் உடல் நசுங்கி பரிதாபமாகஉயிரிழந்தனர்.
காஞ்சிபுரத்திலிருந்து சுங்குவார்சத்திரத்திற்கு ஒரு ஆட்டோ சென்று கொண்டிருந்தது.சின்னையாசத்திரத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது அந்த ஆட்டோவுடன் எதிர்த் திசையில்வந்த ஒரு அரசு பஸ் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் ஆட்டோ சுக்கு நூறாக நொறுங்கியது. ஆட்டோவில் பயணம் செய்த 4 பேரும் உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இவர்களில் 2 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
இவ்விபத்து காரணமாக அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கு போக்குவரத்து கடுமையாகப்பாதிக்கப்பட்டது.
இதற்கிடையே இவ்விபத்து நடந்த சிறிது நேரம் கழித்து இதே சாலையில் மற்றொரு விபத்துஏற்பட்டது. பஸ்சும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட இவ்விபத்தில் லாரி டிரைவர் உள்பட2 பேர் உயிரிழந்தனர்.
இரு விபத்துக்கள் குறித்தும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-->












Click it and Unblock the Notifications