விழுப்புரத்தில் 15ம் தேதி "மிஸ் கூவாகம் 2003"
சென்னை:
விழுப்புரம் மாவட்டம் கூவாகத்தில் குவிந்துள்ள அலிகளுக்கான அழகிப் போட்டி "மிஸ் கூவாகம்2003" நாளை மறுநாள் விழுப்புரத்தில் நடக்கிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்குள்ளஅரவாண் சுவாமியைத் தரிசிக்க ஆண்டுதோறும் சித்ரா பெளர்ணமி அன்று அலிகள் வருவதுவழக்கம்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் கூத்தாண்டவர்கள் கோவிலுக்கு வந்து குவிவார்கள்.
அதேபோல் இந்த ஆண்டும் அலிகள் வந்து குவிந்து கொண்டிருக்கின்றனர். கடந்த இரண்டு வாரமாகவிழா, கூத்து என்று அலிகள் கலக்கிக் கொண்டுள்ளனர்.
முக்கிய நிகழ்ச்சியான தாலி கட்டி பிரிக்கும் நிகழ்ச்சி வரும் 16ம் தேதி நடைபெறுகிறது. அதற்குமுன்பாக அலிகளுக்கான அழகிப் போட்டியான "மிஸ் கூவாகம 2003" நடைபெறவுள்ளது.
பல்வேறு சமூக நல அமைப்புகள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த அழகிப் போட்டி 15ம்தேதி நடைபெறுகிறது.
அலிகள் கலந்து கொள்ளும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-->












Click it and Unblock the Notifications