"கருணாநிதி கைதாகலாம்": வதந்தியால் சென்னையில் பரபரப்பு
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி கைது செய்யப்படலாம் என்ற தகவல் பரவியதைத் தொடர்ந்துசென்னையில் உள்ள அவருடைய வீட்டின் முன்பாக ஏராளமான கட்சித் தொண்டர்கள் கூடினர்.இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
ராணி மேரி கல்லூரி இடிக்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதாஅறிவித்ததிலிருந்தே தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக சூடான அரசியல் சம்பவங்கள்நடந்தேறியுள்ளன.
அந்தக் கல்லூரி மாணவிகளைச் சென்று சந்தித்து வந்த மறுநாள் நள்ளிரவிலேயே திமுகஇளைஞரணிச் செயலாளர் ஸ்டாலின் உள்ளிட்ட அக்கட்சி எம்.எல்.ஏக்கள் அதிரடியாகக் கைதுசெய்யப்பட்டனர்.
இந்நிலையில் கருணாநிதியையும் கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாகச் சென்னையில்நேற்று இரவு செய்தி கிளம்பியது. காட்டுத் தீப்போல் கிளம்பிய இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டதிமுக தொண்டர்கள், கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டிற்கு விரைந்தனர்.
தங்கள் வீட்டிற்கு முன்பாக நூற்றுக்கணக்கான திமுகவினர் குவியத் தொடங்கியதைக் கண்டகருணாநிதி குடும்பத்தினர் முதலில் குழம்பினர். "தலைவர் கைது செய்யப்படவில்லை. போலீசாரும்இங்கு வரவில்லை" என்று அவர்கள் தொண்டர்களிடம் கூறி சமாதானப்படுத்தினர்.
ஆனாலும் தொண்டர்கள் கேட்கவில்லை. "இன்று இரவு போலீசார் வருவார்கள். தலைவரைக் கைதுசெய்ய நாங்கள் அவர்களை அனுமதிக்க மாட்டோம்" என்று கூறியபடியே வீட்டின் முன்பாகத் திமுகதொண்டர்கள் அமர்ந்து விட்டனர்.
கொசுக்கடி, கொட்டும் பனி ஆகியவற்றைப் பொறுத்துக் கொண்டு நள்ளிரவுக்கு மேல் வரைஅங்கேயே தொண்டர்கள் காத்துக் கிடந்தனர்.
பின்னர் மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சர் டி.ஆர். பாலு உள்ளிட்ட திமுக தலைவர்கள் வந்துதொண்டர்களைச் சமாதானப்படுத்தி அவர்களுடைய வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
தீக்குளிக்கக் கூடாது- கருணாநிதி அறிவுரை:
இதற்கிடையே திமுக தொண்டர்கள் யாரும் தீக்குளித்து தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்ளும்அளவுக்கு போகக் கூடாது என்று கருணாநிதி உருக்கத்துடன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக "முரசொலி"யில் அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
திமுக இளைஞரணிச் செயலாளர் ஸ்டாலின் உள்ளிட்ட நம் கட்சி எம்.எல்.ஏக்கள் கைதைக்கண்டித்துத் தொண்டர்களாகிய நீங்கள் போராடி வருவதை நான் அறிவேன்.
இது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும் சில இடங்களில் தீக்குளிப்பு வரை தொண்டர்கள் செல்வதைக்கேள்விப்பட்டு அதிர்ச்சியுற்றேன்.
தொண்டர்கள்தான் கட்சியின் நாடித் துடிப்பே. அவர்கள்தான் கட்சிக்கு அவசியம் தேவை. கட்சிக்குமட்டுமல்ல. தமிழகத்திற்கும், ஏன், இந்தியாவுக்கும் கூட திமுக தொண்டர்கள் அவசியம் தேவை.
எனவே தொண்டர்கள் தற்கொலைக்கு முயற்சிக்கக் கூடாது.
குறிஞ்சிப்பாடியில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய திமுகவினர் மீது போலீசார்கண்மூடித்தனமாக தடியடி நடத்தியுள்ளனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று அந்தக்கடிதத்தில் கருணாநிதி கூறியுள்ளார்.
பஸ் எரிப்பு- 18 திமுகவினர் கைது:
இதற்கிடையே ஈரோட்டில் அரசு பஸ்சை எரித்ததாக 18 திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
ஸ்டாலின் கைதைக் கண்டித்து நடந்த போராட்டத்தின்போது இந்த பஸ் எரிக்கப்பட்டது.டிப்போவுக்குச் சென்று கொண்டிருந்தபோது அந்த பஸ்சை தடுத்து நிறுத்தி திமுகவினர் அதற்குத் தீவைத்தனர்.
இதில் பஸ் முழுவதும் எரிந்து சாம்பலானது. இது தொடர்பாக 18 திமுகவினரைப் போலீசார் கைதுசெய்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
மீண்டும் திமுகவில் மாஜி அமைச்சர்:
இந்நிலையில் திமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் மீண்டும் கட்சியில்சேர்க்கப்பட்டுள்ளார்.
திமுக ஆட்சிக் காலத்தில் செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சராக இருந்தவர் முல்லைவேந்தன்.தர்மபுரியைச் சேர்ந்த அவர் அமைச்சர் பதவியில் இருந்தபோது அவருக்கு எதிராக வழக்குதொடரப்பட்டது.
இதையடுத்து அவர் அமைச்சர் பதவியிலிருந்து விலகினார். பின்னர் கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார்.
தற்போது வழக்கிலிருந்து விடுபட்டுள்ளதால், தன்னை மீண்டும் திமுகவில் சேர்த்துக் கொள்ளுமாறுகட்சித் தலைமைக்கு அவர் கடிதம் எழுதியிருந்தார்.
இதைத் தொடர்ந்து அவர் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளதாக திமுக பொதுச் செயலாளர்அன்பழகன் தெரிவித்துள்ளார்.
-->












Click it and Unblock the Notifications