தமிழை செம்மொழியாக அறிவிக்க மத்திய அரசுக்கு கருணாநிதி வலியுறுத்தல்
சென்னை:
தமிழை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு திமுக தலைவர் கருணாநிதிவேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னையில் உள்ள தமிழ் மொழி அகாடமி சார்பில் நடைபெற்ற 10வது தேசிய மொழிகள்மாநாட்டின் தொடக்க விழா இன்று காலை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருணாநிதிபேசுகையில்,
இவ்விழாவில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் தமிழ் மொழியை செம்மொழியாக்க வேண்டும்என்று கேட்டுக் கொண்டார்கள்.
அது தேவையில்லை. ஏனென்றால் தமிழ் ஏற்கனவே செம்மொழிதான். அம்மொழி செம்மொழியாகஅறிவிக்கப்பட வேண்டும் என்பதுதான் நம் கோரிக்கையாக இருக்க வேண்டும்.
தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசைத் தொடர்ந்துவலியுறுத்துவேன். இதற்காக என்னாலான அனைத்து வகையான முயற்சிகளிலும் நான்ஈடுபடுவேன்.
தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என ஏற்கனவே மத்திய அரசுக்கு தமிழக அரசுகடிதம் அனுப்பியுள்ளதாகக் கேள்விப்பட்டேன்.
எனவே தமிழை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கட்சி சார்பற்றமுறையில் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுப்பேன் என்றார் கருணாநிதி.
2004ம் ஆண்டுக்கான மொழியாக தமிழ் மொழியை அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட வேறு சிலகோரிக்கைகளையும் மத்திய அரசிடம் வலியுறுத்தப் போவதாகவும் கருணாநிதி கூறினார்.
கருணாநிதியின் 60 ஆண்டு கால தமிழ்ச் சேவையைப் பாராட்டி அவருக்கு "இலக்கியக் கடல்" என்றபட்டம் இவ்விழாவில் வழங்கப்பட்டது. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மோகன் இவ்விருதைவழங்கினார்.
கவிஞர் வாலி, பிரபல நரம்பியல் நிபுணரான டாக்டர் ராமமூர்த்தி உள்ளிட்டவர்கள் இவ்விழாவில்கலந்து கொண்டனர்.
-->












Click it and Unblock the Notifications