சில்லரை தட்டுப்பாட்டை போக்க எந்திரம்: சென்னையில் அறிமுகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பஸ், ரயில் பயணிகளுக்கு ஏற்படும் சில்லரைத் தட்டுப்பாட்டைப் போக்க சென்னையில் தானியங்கிசில்லரை மையம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

பஸ், ரயில், கடைகள் எனப் பல இடங்களிலும் மக்கள் சில்லரை கிடைக்காமல் அவதிப்படுவது நாம்அன்றாடம் பார்க்கும் செயலாகும்.

இதையடுத்து சில்லரைத் தட்டுப்பாட்டைப் போக்குவதற்காக சென்னையில் தானியங்கி சில்லரைமையம் ஒன்றைத் திறந்து வைத்துள்ளது இந்தியன் வங்கி. கோர்ஸ் (இந்தியா) என்ற நிறுவனம்இதற்குரிய எந்திரத்தைத் தயாரித்துள்ளது.

நாட்டிலேயே முதல் முறையாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இந்த எந்திரம்வைக்கப்பட்டுள்ளது. ரூ.10, ரூ.20க்கான ரூபாய் நோட்டுக்களைப் போட்டால் அதற்குச் சமமான 1ரூபாய், 2 ரூபாய் மற்றும் 50 காசு நாணயங்கள் இதில் வந்து விழுகின்றன.

அந்தச் சில்லரைகளை மக்கள் எடுத்து சில்லரைத் தட்டுப்பாட்டைப் போக்கிக் கொள்ளலாம். ரூ.5லட்சம் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த எந்திரத்தில் ஒரே நேரத்தில் 8,500 நாணயங்களைஅடுக்கி வைக்க முடியுமாம்.

கள்ள ரூபாய் நோட்டுக்களை மிகவும் எளிதாகக் கண்டுபிடித்து விடும் வகையில் இந்த எந்திரம்செய்யப்பட்டுள்ளதாக இந்தியன் வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கள்ள நோட்டை இந்தஎந்திரம் ஏற்றுக் கொள்ளாமல் ஒதுக்கி விடும் என்றும் அவர் கூறினார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+