""ஸ்டாலின் மீது பொய் வழக்கு போட்டுள்ளது தமிழக அரசு"": சோ.பா.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுக இளைஞரணிச் செயலாளர் ஸ்டாலின் மீது தமிழக அரசு பொய் வழக்கைப் போட்டுள்ளதுஎன்று தமிழக காங்கிரஸ் தலைவர் சோ. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சென்னையில் இன்று அவர் நிருபர்களிடம் கூறுகையில்,

கடந்த வாரம் ராணி மேரி கல்லூரிக்கு ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் சென்றனர்.

அப்போது கல்லூரியின் கேட் திறந்துதான் இருந்தது. உடனே அவர்கள் உள்ளே நுழைந்து விட்டனர்.மாணவிகளின் போராட்டத்திற்குத் தங்களுடைய ஆதரவை அவர்கள் தெரிவித்தனர்.

அதே சமயத்தில் ராணி மேரி கல்லூரியின் முன்னாள் மாணவிகள் என்னை வந்து சந்தித்தனர்.கல்லூரியை இடிக்கக் கூடாது என அதன் மாணவிகள் நடத்தும் போராட்டத்திற்கு நானும் ஆதரவுஅளிக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

ஸ்டாலின் அப்போது கல்லூரி வளாகத்தில் இருப்பதை அறிந்து நானும் அங்கு சென்றேன். ஆனால்நான் சென்றபோது கல்லூரியின் கேட் பூட்டப்பட்டிருந்தது. எனவே நான் வாசலுக்குவெளியிலேயே நின்று விட்டேன்.

ஆனால் கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே வருமாறு மாணவிகள் என்னை அழைத்தனர். ஆனால்நான் மறுத்து விட்டேன்.

ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் மீது பொய்யான வழக்குகளைத்தான் தமிழக அரசுதொடர்ந்துள்ளது.

திமுக எம்.எல்.ஏ. பரிதி இளம்வழுதி சட்டசபை விதிமுறைகளுக்கு மாறாக சஸ்பெண்ட்செய்யப்பட்டுள்ளார்.

திமுகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்திருக்கவில்லை. சில விஷயங்களில இரு கட்சியினரும்ஒத்துப் போகிறோம். அவ்வளவுதான். இதை வைத்துக் கொண்டு கூட்டணி அமைந்து விட்டதாகக்கூற முடியாது.

காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டிப் பூசல் இல்லை. அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டுவருகிறோம் என்றார் சோ.பா.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+