"நக்கீரன்" கோபாலை விடுதலை செய்யக் கோரி மனைவி உண்ணாவிரதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கைது செய்யப்பட்டுள்ள "நக்கீரன்" பத்திரிக்கையின் ஆசிரியர் கோபாலை உடனடியாக விடுதலைசெய்ய வேண்டும் என்று கோரி அவருடைய மனைவியும் குடும்பத்தினரும் சென்னையில்உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர்.

கடந்த 12ம் தேதி இரவு தமிழக போலீசார் கோபாலைக் கைது செய்தனர். கொலை வழக்கு, சந்தனக்கடத்தல் வீரப்பனுக்கு ஆயுதங்கள் கடத்திய வழக்கு, தமிழகத்தைப் பிரிக்க முயற்சித்ததாக வழக்குஎனப் பல்வேறு வழக்குகள் அவர் மீது தொடரப்பட்டுள்ளன.

இந்நிலையில் கோபாலை உடனடியாக விடுதலை செய்யக் கோரி கோபாலின் மனைவியும்அவருடைய குடும்பத்தினரும் இன்று ஒருநாள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

"நக்கீரன்" பத்திரிக்கை ஊழியர்களும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். "நக்கீரன்"பத்திரிக்கை அலுவலக வாசலில் இப்போராட்டம் நடைபெற்றது.

"வேறு எந்த வழக்கும் போட முடியாததால் கோபால் மீது தமிழக அரசு பொய் வழக்குகளைச்சுமத்தியுள்ளது" எனப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குற்றம் சாட்டினர்.

இதற்கிடையே கோபால் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை பொடா வழக்குகளாக மாற்ற தமிழகஅரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கான ஆவணங்களை தமிழகப் போலீசார் மிகவும்ஜரூராகத் தயாரித்து வருவதாகவும் தெரிகிறது. இது குறித்தும் இன்று போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அச்சம் தெரிவித்தனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+