""சிறை செல்ல அஞ்ச மாட்டேன்"": இளங்கோவன்
சென்னை:
"எதிர்த்துப் பேசினால் சிறையில் அடைப்போம் என்று இந்த ஆட்சியில் மிரட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். எப்போதுவேண்டுமானாலும் சிறை செல்லத் தயாராகவே இருக்கிறேன்" என்று காங்கிரஸ் செயல் தலைவர்இளங்கோவன் கூறினார்.
சென்னையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் வர்த்தகப் பிரிவின் 5ஆம் ஆண்டு தொடக்க விழாவில்கலந்து கொண்டு இளங்கோவன் பேசுகையில்,
எதிர்த்துப் பேசினால் பொடா, நள்ளிரவில் கைது, அதிரடி சிறையடைப்பு என இந்த ஆட்சியில்பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் நான் அஞ்சுவதாக இல்லை.
ஆட்சியின் தவறுகளைத் தட்டிக் கேட்டால் சிறைவாசம் என்றால் தினமும் சிறைக்குச் செல்வதற்கும்நான் தயாராகத்தான் உள்ளேன். என் பக்கம் எந்தத் தவறும் இல்லை.
ஆனால் இந்த ஆட்சியில்தான் எது வேண்டுமானாலும் நடக்குமே. எனவே எப்போதுவேண்டுமானாலும் சிறை செல்லத் தயாராக, பெட்டி-படுக்கையுடன் தயாராகவே உள்ளேன் என்றார்இளங்கோவன்.
அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் ஜி.கே. வாசன், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்திநடராஜன், முன்னாள் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் உள்ளிட்ட தலைவர்கள் இந்நிகழ்ச்சியில்கலந்து கொண்டனர்.
-->












Click it and Unblock the Notifications