""சீற மறந்த "356" என்ற நச்சுப் பாம்பு"": கருணாநிதி வேதனை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

""நாம் "356" என்ற நச்சுப் பாம்பு யாரையும் கடிக்கக் கூடாது என்று எச்சரிக்கையாக இருந்துவருகிறோம். ஆனால் அந்தப் பாம்பு இப்போதெல்லாம் சீறுவதற்குக் கூட மறந்து விட்டது"" என்றுதிமுக தலைவர் கூறியுள்ளார்.

மாநில அரசுகளைக் கவிழ்க்கும் 356வது அரசியல் சட்டப் பிரிவு தற்போது செயல்படுத்தப்படாமல்இருப்பதைச் சுட்டிக் காட்டி கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"356" என்ற நச்சுப் பாம்பு கடிக்கவே கூடாது என்றுதான் நாமெல்லாம் எச்சரிக்கையாக இருந்துவருகிறோம். ஆனால் அந்தப் பாம்பு இப்போது சீறுவதற்குக் கூட மறந்து விட்டது.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை பாதிக்கப்பட்டால்தான் மத்திய அரசு தலையிடும் என பா.ஜ.க.செயலாளர் இல. கணேசன் கூறியுள்ளார்.

ஆனால் சட்டம்-ஒழுங்கு என்ற ஒன்று இங்கு இருந்தால்தானே அது பாதிக்கப்பட்டுள்ளதா,இல்லையா என்ற கேள்வியே எழும். சட்டம்-ஒழுங்கே தமிழகத்தில் இப்போதுசெயல்படவில்லையே.

கடந்த வாரம் கைது செய்யப்பட்ட திமுக இளைஞரணிச் செயலாளர் ஸ்டாலின் உள்ளிட்டஎம்.எல்.ஏக்களுக்கு ஜாமீன் கோருவது குறித்து கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்கும் என்றுஅவ்வறிக்கையில் கூறியுள்ளார் கருணாநிதி.

கருணாநிதி-ராமதாஸ் இன்று சந்திப்பு:

இதற்கிடையே கருணாநிதியை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று சந்தித்துப் பேசுகிறார்.

விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் இது தொடர்பாக ராமதாஸ் பேசுகையில்,

தமிழகத்தில் தற்போது அசாதாரணமான சூழ்நிலை நிலவுகிறது. இது தொடர்பாக கருணாநிதியைச்சந்தித்துப் பேசவுள்ளேன். தமிழகத்தின் அரசியல் பிரச்சனைகள் தொடர்பாக அவருடன்விவாதிப்பேன்.

எதிர்க் கட்சிகள் தற்போது ஒற்றுமையுடன் செயல்பட்டு வருகின்றன. ஆனால் இந்த ஒற்றுமையைக்குலைக்க சில சக்திகள் முயற்சிக்கின்றன. அதற்கு எதிர்க் கட்சிகள் இடம் கொடுத்துவிடக் கூடாதுஎன்றார் ராமதாஸ்.

கருணாநிதிக்கு ரஜினி புத்தாண்டு வாழ்த்து:

இதற்கிடையே தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு கருணாநிதிக்கு நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசிமூலம் வாழ்த்து தெரிவித்தார்.

தமிழ்ப் புத்தாண்டான நேற்று காலை கருணாநிதியின் வீட்டக்கு போன் செய்த ரஜினிகாந்த்,அவருக்குப் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

ரஜினிக்கு நன்றி தெரிவித்த கருணாநிதி, அவருக்கும் தன்னுடைய தமிழ்ப் புத்தாண்டுவாழ்ததுக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+