பட்டினி கொடுமை: மீண்டும் நெசவாளர்களுக்கு கஞ்சி தொட்டி திறப்பு
ஈரோடு:
ஈரோட்டில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் விசைத்தறி நெசவாளர்களுக்காக கஞ்சித் தொட்டி திறக்கப்பட்டுள்ளது. கடந்தஆண்டு கைத்தறி நெசவாளர்களுக்கு கஞ்சித் தொட்டி திறக்கும் நிலை ஏற்பட்டது. இப்போது அதே நிலை சிறிய விசைத்தறிகளில்பணியாற்றும் நெசவாளர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.
கலால் வரி உயர்த்தப்பட்டதைக் கண்டித்து கடந்த 16 நாட்களாக விசைத்தறி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்செய்து வருகின்றனர். இதனால் இந்தத் தறிகளில் பணியாற்றி வரும் லட்சக்கணக்கான ஏழை நெசவாளர்கள் வேலையும் தினக்கூலியும் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
இதனால் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த நெசவுத் தொழிலாளர்களின் குடும்பங்கள் உணவுக்கு ஏங்கும் நிலைஏற்பட்டுள்ளது.
சாப்பிடுவதற்கு வழி இல்லாமல், இதற்கு மேல் கடனும் கூட வாங்க முடியாத மோசமான நிலைக்கு அவர்கள்தள்ளப்பட்டுள்ளனர். இதையடுத்து ஈரோட்டில் நேற்று முதல் அவர்களுக்காக கஞ்சித் தொட்டி திறக்கப்பட்டது.
வீரப்பன் சத்திரம் என்ற இடத்தில் இந்தக் கஞ்சித் தொட்டி திறக்கப்பட்டுள்ளது. இந்த சிறிய ஊரில் மட்டும் ஆயிரக்கணக்கானவிசைத்தறி நெசவாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பகுதியில் உள்ள கண்ணதாசன் நகரில் திறக்கப்பட்டுள்ள கஞ்சித் தொட்டியை நாடி ஏராளமான நெசவாளர்கள் வந்து கஞ்சி பெற்றுச்செல்கின்றனர்.
கடந்த ஆண்டு கைத்தறி ஆடைகளை வாங்குவதை தமிழக அரசு திடீரென நிறுத்தியதால் தென் மாவட்டங்களில் கைத்தறிநெசவாளர்களுக்காக ஏராளமான கஞ்சித் தொட்டிகள் திறக்கப்பட்டதும் அதையும் கூட அதிமுகவினர் அரசியலாக்கியதும்நினைவுகூறத்தக்கது.
மதுரையில் இதுபோன்ற ஒரு கஞ்சித் தொட்டி திறப்பு விழாவின்போது, அதே பகுதியில் அதிமுகவினர் போட்டி போட்டுக் கொண்டுநெசவாளர்களுக்கு இலவச பிரியாணி வழங்குவதாக கூறி நெசவாளர்களின் பசியுடன் அரசியல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இதனால் ஏற்பட்ட கலவரத்தில் கஞ்சித் தொட்டி உடைக்கப்பட, கஞ்சியைப் பெறுவதற்காக வந்த ஏழை நெசவாளர்கள் இதைக்கண்டு நொந்து போய் தங்களுக்கு சாப்பாடே வேண்டாம் என்று கூறி கண்ணீருடனும் வீடு திரும்பியது நினைவுகூறத்தக்கது.
இந்நிலையில் தற்போது ஈரோட்டில் விசைத்தறி நெசவாளர்களுக்காக கஞ்சித் தொட்டி திறக்கப்பட்டுள்ளது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications