திருச்சி பள்ளியில் பயங்கர தீ: அதிர்ஷ்டவசமாய் தப்பிய 300 குழந்தைகள்
திருச்சி:
திருச்சியில் உள்ள செவந்த் டே ஆங்கிலப் பள்ளியில் ஏற்பட்ட பயங்கரமான தீவிபத்தில் அங்குபடித்து வந்த சுமார் 300 குழந்தைகள் அதிர்ஷ்டவசமாகத் தப்பித்தனர்.
திருச்சி-சுப்பிரமணியபுரம் பகுதியில் செவந்த் டே அட்வென்டிஸ்ட் ஆங்கிலப் பள்ளி உள்ளது.
கோடை விடுமுறை விடப்பட்டிருந்தபோதிலும் அப்பள்ளிக் குழந்தைகளுக்கு சிறப்பு வகுப்புகள்நடத்தப்பட்டு வந்தன. இதற்காக 300க்கும் அதிகமான குழந்தைகள் பள்ளிக்கு இன்று வந்திருந்தனர்.
இந்நிலையில் பள்ளியில் மேற்கூரையில் திடீரென்று பற்றிக் கொண்ட தீ மளமளவென பள்ளியின்அனைத்துப் பகுதிகளுக்கும் பரவியது.
தீப்பிடித்ததை முதலில் கவனிக்காத குழந்தைகளும் ஆசிரிய, ஆசிரியைகளும் பின்னர் தீபரவுவதைக் கண்ட பின்னர் அலறி அடித்துக் கொண்டு அங்கும் இங்கும் ஓடித் தவித்தனர்.
ஆனால் இதற்குள் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் விரைந்து வந்து பள்ளிக்குள் புகுந்துஅனைத்துக் குழந்தைகளையும், ஆசிரிய, ஆசிரியைகளையும் பத்திரமாகக் காப்பாற்றி வெளியேகொண்டு வந்து சேர்த்தனர்.
இதனால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. இதற்கிடையே பள்ளியின் பெரும்பாலானபகுதிகள் தீயில் எரிந்து சாம்பலாயின. தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன் அப்பகுதி மக்களேதீயை முழுவதுமாக அணைத்து விட்டனர்.
இச்சம்பவத்தில் பள்ளிக்கு அருகிலிருந்த 4 வீடுகளும், ஒரு பெட்டிக் கடையும் சேதமடைந்தன.
தீப்பிடித்தது எப்படி என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications