"நக்கீரன்" கோபால் பொடா சட்டத்தில் கைது: அடுத்த குறி கருணாநிதி?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

"நக்கீரன்" பத்திரிக்கையின் ஆசிரியர் கோபால் மீது பொடா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. இவரை பொடா சட்டத்தில் சிறையில் அடைத்து வாக்குமூலம் வாங்கி கருணாநிதியையும்கைது செய்யும் முயற்சியில் முதல்வர் ஜெயலலிதா ஈடுபட்டுள்ளார்.

கொலை வழக்கு, லைசன்ஸ் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்தது, தனித் தமிழ்நாடு உருவாக்கமுயற்சித்தது போன்ற குற்றச்சாட்டுகளைக் கூறி அவரை தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைதுசெய்தனர்.

அவர் மீது ஆயுதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.ஆனால், இப்போது கோபால் மீது பொடாவில் வழக்குத் தொடர ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இதையடுத்து அவர் மீதான அனைத்து வழக்குகளையும் பொடா வழக்குகளாக போலீசார்மாற்றியுள்ளனர்.

அறிவிப்பு வெளியீடு:

பொடா சட்டத்தின் 4-ஏ பிரிவின் கீழ் சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருப்பது, தீவிரவாதிகளுடன்தொடர்பு வைத்திருப்பது, பிரிவினைவாதத்தைத் தூண்டுவது ஆகியவற்றின் கீழ் கைது செய்யமுடியும். ஆனால், இந்தப் பிரிவின் கீழ் யாரையாவது கைது செய்ய வேண்டுமானால் அதற்கானஅறிவிப்பை மாநில அரசு வெளியிட வேண்டும் என்ற விதி உள்ளது.

இந் நிலையில் கோபால் குறித்து அதுபோன்ற ஒரு அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.வீரப்பனுடன் உள்ள தமிழ்த் தீவிரவாதிகளுடன் சேர்ந்து அவர் நாட்டைப் பிளக்க தேச விரோதகுற்றம் செய்ததாக அதில் அரசு கூறியுள்ளது.

நீதிபதி அனுமதி:

அதே போல கோபாலை பொடா சட்டத்தின் கீழ் கைது செய்ய அனுமதி கோரி சென்னை எழும்பூர்நான்காவது நீதிமன்ற நீதிபதி ராமபத்திரனிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று ஒரு மனு தாக்கல்செய்தனர்.

அதில் கோபால் மீதான ஆயுதத் தடுப்பு வழக்குகள் பொடா வழக்குகளாக மாற்றப்பட்டுள்ளதாகவும்இதனால் அவரை பொடா சட்டத்தின் கீழ் கைது செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும்கூறப்பட்டிருந்தது.

சி.பி.சி.ஐ.டியின் இந்தக் கோரிக்கையை ஏற்ற நீதிபதி வீரபத்ரன், பொடா சட்டத்தின் கீழ் கோபால்மீது வழக்குப் பதிவு செய்ய அனுமதி அளித்தார். இதைத் தொடர்ந்து வழக்கு பூந்தமல்லியில் உள்ளபொடா நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கோபால் இன்றே பூந்தமல்லியில் உள்ள பொடாசிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். இதன் பிறகு பொடா சட்டத்தின் கீழ் சிறையில்தள்ளப்படுவார்.

4-ஏ பிரிவு தவிர பொடாவின் பிற பிரிவுகளின் கீழும் அவர் மீது வழக்குகள் பதிவு செய்வதுகுறித்தும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

ஜாமீன் கோரும் கோபால்:

இந் நிலையில் தன்னை விடுதலை செய்யக் கோரி இன்று கோபால் இரு ஜாமீன் மனுக்களைத் தாக்கல்செய்துள்ளார். சைதாப்பேட்டை 6வது செசன்ஸ் நீதிமன்றத்திலும் எழும்பூர் 2வது சிறப்புநீதிமன்றத்திலும் அவர் இந்த ஜாமீன் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், என் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முதல்வர் ஜெயலலிதா கைது செய்துள்ளார்.நான் சட்ட விரோதமாக ஆயுதம் வைத்திருந்தாக போலீசார் போட்டுள்ள வழக்கு மோசடியானது.என்னிடம் எந்த ஆயுதமும் இல்லை. அதே போல தீவிரவாதிகளுக்கும் எனக்கும் தொடர்புஇருப்பதாக பொய்யான வழக்கை ஜெயலலிதா போட வைத்துள்ளார் என்று கோபால் கூறியுள்ளார்.

முதல் பத்திரிக்கையாளர்:

தமிழகத்தில் ஜெயலலிதாவும், உத்தரப் பிரதேசத்தில் மாயாவதியும் தங்களை எதிர்ப்பவர்களை பொடா மூலம் சட்டத்தின் கீழ் கைதுசெய்து அந்த சட்டத்தையே கேவலப்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரு மாநில முதல்வர்களுக்கும் பொடாஒரு விளையாட்டுப் பொருளாகியுள்ளது.

தீவிரவாதிகளை ஒழிக்கக் கொண்டு வரப்பட்ட இந்தச் சட்டத்தின் கீழ் தமிழகத்தில் இதுவரை 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கோபால் 42வது நபராவார். இதன்மூலம் பொடாவில் கைது செய்யப்பட்டுள்ள நாட்டின் இரண்டாவது பத்திரிக்கையாளர் என்றபெருமையை கோபால் பெற்றுள்ளார். முதலில் காஷ்மீரைச் சேர்ந்த நிருபர் இப்திகார் கைது செய்யப்பட்டார். பின்னர்அவர் மீதான வழக்கை மத்திய அரசு வாபஸ் பெற்றுவிட்டது.

கோபால் மீது இது தவிர மேலும் 11 வழக்குகளை தமிழக போலீசார் பதிவு செய்துள்ளனர்.

அடுத்த குறி கருணாநிதி:

சிறையில் கோபாலிடம் வீரப்பன், பண பட்டுவாடா குறித்து வாங்கப்படும் வாக்குமூலத்தில் எப்படியாவது திமுகதலைவர் கருணாநிதியையும் இழுத்து அவரையும் கைது செய்ய ஜெயலலிதா திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+