மார்பில் பாய்ந்த "வளர்த்த கடா": அண்ணனை கொன்ற போலீஸ்காரருக்கு ஆயுள்
சென்னை:
வளர்த்து, ஆளாக்கி, கல்யாணமும் செய்து வைத்த அண்ணனைப் படுகொலை செய்தவருக்குவிதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
கடலூரைச் சேர்ந்தவர் சிவராமன். இவருடைய தம்பி குமார். சிறு வயதிலிருந்தே குமாரை வளர்த்துநன்கு படிக்க வைத்த சிவராமன், மிகவும் கஷ்டப்பட்டு அவருக்கு போலீஸ் வேலையும் வாங்கிக்கொடுத்தார்.
பின்னர் குமாருக்கு ஒரு பெண்ணைப் பார்த்து திருமணமும் செய்து வைத்தார். அதுவும் தன் மனைவிசித்ராவின் தங்கை பேபியையே தன் தம்பிக்கு மணம் முடித்து வைத்தார் சிவராமன்.
ஆனால் காலப் போக்கில் குமாருக்கு பேபியைப் பிடிக்காமல் போய்விட்டது. தன்னுடன்வேலைபார்த்து வந்த சுந்தரி என்ற பெண் போலீஸ்காரரைக் காதலித்து மற்றொரு திருமணம் செய்துகொண்டு தனிக் குடித்தனம் சென்றார் குமார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பேபி, தன் அக்காவின் வீட்டுக்கே வந்து விட்டார். பின்னர் குமாரின்உயர் அதிகாரிகளிடம் அவர் புகார் செய்தார்.
முதல் மனைவியாகிய தான் இருக்கும்போதே என்னுடைய சம்மதம் இல்லாமல் சுந்தரியைத் தன்கணவர் திருமணம் செய்து கொண்டு வருவதாகவும், இருதார மணத் தடுப்புச் சட்டப்படி இது சட்டவிரோதமானது என்றும் தன் புகார் மனுவில் பேபி கூறியிருந்தார்.
இதையடுத்து நடந்த விசாரணையின் முடிவில் குமாரும் சுந்தரியும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.இத்துடன் பேபி நின்றுவிடவில்லை. தனக்கு மாதந்தோறும் தேவைப்படும் பராமரிப்பு செலவைகுமார் ஏற்க வேண்டும் என்று கோரி குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த குமார் இதற்கெல்லாம் காரணம் தன் அண்ணன்தான் என்று கருதி அவரைக்கொலை செய்யத் திட்டமிட்டார்.
இதையடுத்து லாரி டிரைவர்களான கண்ணன் மற்றும் சக்கரவர்த்தி ஆகியோருடன் சேர்ந்து கடந்த1998 ஆகஸ்டு 18ம் தேதி சிவராமனை லாரியால் ஏற்றிக் கொன்றார் குமார்.
முதலில் இது விபத்தாகவே கருதப்பட்டது. ஆனால் பின்னர் நடந்த விசாரணையின்போதுததான் இதுதிட்டமிட்ட கொலை எனத் தெரிய வந்தது. குமாரின் ஆலோசனைப் படி கண்ணனும்சக்கரவர்த்தியும் சிவராமனைக் கொன்றது தெரிய வந்தது.
இதையடுத்து குமார், கண்ணன் மற்றும் சக்கரவர்த்தி மீது கொலை வழக்கு தொடரப்பட்டது.இவ்வழக்கில் கடலூர் நீதிமன்றம் மூவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து அவர்கள் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இது தொடர்பானமனுவை விசாரித்த நீதிபதி கற்பக விநாயகம் மற்றும் நீதிபதி ராமலிங்கம் ஆகியோர் அடங்கியபெஞ்ச், சந்தேகத்திற்கு இடமே இல்லாமல் அவர்கள் செய்த கொலைக் குற்றம்நிரூபிக்கப்பட்டுள்ளதால் கடலூர் நீதிமன்றம் அவர்களுக்கு விதித்த ஆயுள் தண்டனை சரியே என்றுதீர்ப்பளித்தது.
-->












Click it and Unblock the Notifications