விருத்தாசலம்-வடலூர் இடையே அகல ரயில் பாதை திறப்பு
விருத்தாசலம்:
விருத்தாசலத்திற்கும் வடலூருக்கும் இடையே அமைக்கப்பட்டுள்ள புதிய அகல ரயில் பாதையைரயில்வே துறை இணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தொடங்கி வைத்தார். மற்றொரு இணைஅமைச்சரான ஏ.கே. மூர்த்தி கொடியசைத்தார்.
அகல ரயில் பாதையைத் தொடங்கி வைத்து பண்டாரு பேசுகையில்,
நடப்பு 2003-04ம் ஆண்டை பயணிகளைத் திருப்திப்படுத்தும் ஆண்டாகக் கடைப்பிடித்து வருகிறதுஇந்திய ரயில்வே.
தென்னக ரயில்வே மேம்பாட்டுப் பணிகளுக்காக இந்த ஆண்டு மொத்தம் ரூ.365 கோடியை மத்தியஅரசு ஒதுக்கியுள்ளது. இதில் ரூ.90.21 கோடி அகல ரயில் பாதைத் திட்டங்களுக்காகப்பயன்படுத்தப்படுகிறது.
ரயில்கள் மூலம் முக்கியத் துறைமுகங்களை இணைக்கும் பணி விரைவில் செயல்படுத்தப்பட உள்ளதுஎன்றார் பண்டாரு.
பின்னர் மூர்த்தி பேசுகையில், விருத்தாசலம்- வடலூர் அகல ரயில் பாதைப் பணிகள் முடிவடைந்துஇன்று இப்பாதையில் ரயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது.
அதேபோல் சேலம்-கடலூர் இடையேயான 191 கி.மீ. பாதையை ரூ.198.68 கோடி செலவில் அகலரயில் பாதையாக மாற்றும் பணி இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட உள்ளது என்றார்.
இதற்கிடையே சென்னையில் இன்று நிருபர்களிடம் பேசிய ரயில்வே அமைச்சர் நிதிஷ் குமார்,ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதில் மாநிலத்துக்கு மாநிலம் பாரபட்சம் காட்டப்படாது என்றுஉறுதி அளித்தார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications