ஈராக் குழந்தைகளுக்கு ஆதரவுக் கரம் நீட்டும் சிவானந்தா ஆசிரமம்
காஞ்சிபுரம்:
ஈராக்கில் போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பராமரிக்க தமிழகத்தில் உள்ள சிவானந்தாஆசிரமம் முடிவு செய்துள்ளது.
தற்போது 300 அனாதைக் குழந்தைகளும், 60 முதியோர்களும் இந்த ஆசிரமத்தால்பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஈராக் போரினால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளைப் பராமரிக்கும் பொறுப்பையும்ஏற்றுக் கொள்ள சிவானந்தா சரஸ்வதி ஆசிரமம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர்ஆகியோருக்கு இந்த ஆசிரமத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ராஜாராம் கடிதம் எழுதியுள்ளார்.அதில்,
ஈராக் போரில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து நாங்கள் மிகவும் கவலை அடைந்துள்ளோம்.
இந்தப் போரால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளை ஏற்று, பராமரிக்க நாங்கள் தயாராகசெய்துள்ளோம். இந்தப் பொறுப்பை நாங்கள் ஏற்றுக் கொள்வதற்கான அங்கீகாரத்தை இந்திய அரசுஎங்களுக்கு அளித்துள்ளது.
எனவே இது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என நாங்கள் கேட்டுக் கொள்கிறோம் என்று அந்தக் கடிதத்தில் டாக்டர் ராஜாராம்கூறியுள்ளார்.
-->












Click it and Unblock the Notifications