டால்மியாபுரம் சிமெண்ட் ஆலையில் போனஸ் பணம் கொள்ளை
திருச்சி:
தமிழ்ப் புத்தாண்டையொட்டி ஊழியர்களுக்கு போனஸ் கொடுக்க வைக்கப்பட்டிருந்த ரூ. 34 லட்சம் பணத்தைக்காணவில்லை என திருச்சி டால்மியா சிமெண்ட் ஆலை நிர்வாகம் போலீசில் புகார் தந்துள்ளது.
டால்மியாபுரத்தில் உள்ள இந்த ஆலையின் பெட்டகத்தில் இந்தப் பணம் வைக்கப்பட்டிருந்தது. ஆலையின் இருகேசியர்களும் இந்தப் பெட்டகத்தின் இரு சாவிகளை ஆளுக்கு ஒன்றாக வைத்திருந்தனர்.
அவசரமாக சென்னை செல்ல வேண்டி இருந்ததால் ஒரு கேசியர் தன்னிடம் இருந்த சாவியை இன்னொருகேசியரிடம் கொடுத்துவிட்டுச் சென்றார்.
இந் நிலையில் கேசியரும் ஆலையின் இன்னொரு அதிகாரியும் பெட்டகத்தைத் திறந்தபோது அதில் போனஸ்தருவதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ. 34 லட்சம் பணம் இல்லாதது கண்டு திடுக்கிட்டனர்.
உடனடியாக இது குறித்து போலீசாரிடம் புகார் தரப்பட்டது. போனஸ் பணம் தவிர பெட்டகத்தில் இருந்த மேலும்பணமும் காணாமல் போய் இருப்பதாக ஆலை நிர்வாகம் கூறியுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-->












Click it and Unblock the Notifications