குமரி தெருக்களில் சுற்றித் திரிந்த 23 மன நோயாளிகள் மீட்பு
நாகர்கோவில்:
கன்னியாகுமரியில் சுற்றித் திரிந்த 23 மன நோயாளிகளை போலீசார் மீட்டனர். அவர்கள்அனைவரையும் சென்னை-கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசினர் மருத்துவமனையில் சேர்க்கநடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கன்னியாகுமரியில் ஏராளமான மன நோயாளிகள் சுற்றித் திரிவதாகவும், அவர்களுடைய நிலைமிகவும் பரிதாபமாக உள்ளதாகவும் மனித உரிமை கமிஷனுக்குக் கடிதங்கள் வந்தன.
மன நிலை பாதிக்கப்பட்டவர்களை அவர்களுடைய உறவினர்கள் கன்னியாகுமரிக்கு அழைத்துவந்து அங்கு விட்டுவிட்டுச் சென்று விடுவது வழக்கமாகி வருகிறது.
இவ்வாறு நூற்றுக்கும் மேற்பட்ட மன நோயாளிகள் கன்னியாகுமரியில் தெருக்களில் சுற்றிவருகின்றனர். இவர்களைக் கண்டுபிடித்து மீட்க போலீசாருக்கு மனித உரிமை கமிஷன்உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து கன்னியாகுமரியின் பல்வேறு பகுதிகளில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த 23 மனநோயாளிகளைப் போலீசார் மீட்டுள்ளனர். இவர்களில் சில பெண்களும் இருந்தனர்.
அவர்கள் அனைவரும் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களைசென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசினர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல நீதிபதிஉத்தரவிட்டார்.
இதையடுத்து 23 மன நோயாளிகளையும் சென்னைக்குக் கொண்டு செல்வதற்கானநடவடிக்கைகளைப் போலீசார் மேற்கொண்டுள்ளனர்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications