சொத்து குவிப்பு வழக்கில் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி விடுதலை
சென்னை:
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமைநீதிபதி வீராசாமி விடுதலை செய்யப்பட்டார். சி.பி.ஐ. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம்இது தொடர்பாக நேற்று தீர்ப்பளித்தது.
நீதிபதி வீராசாமி கடந்த 1969 முதல் 1976 வரை ரூ.6,41,416 மதிப்புள்ள சொத்துக்களைவருமானத்துக்கு அதிகமாகச் சேர்த்ததாக சி.பி.ஐ. குற்றம் சாட்டி, வழக்கு பதிவு செய்தது.
1977ல் வழக்கு பதிவு செய்யப்பட்டாலும் கடந்த 1997ம் ஆண்டுதான் இவ்வழக்கின் சாட்சிவிசாரணைகள் துவங்கின.
அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் நீதிபதி ராமசாமி நேற்று தீர்ப்பளித்தார்.அந்தத் தீர்ப்பில்,
குற்றம் சாட்டப்பட்டுள்ள நீதிபதி வீராசாமிக்குச் சொந்தமான அசையும் சொத்துக்கள், அசையாசொத்துக்கள், செலவுகள் அனைத்தும் சேர்ந்து ரூ.5,79,010 என அரசுத் தரப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவற்றின் மதிப்பு ரூ.17.36 லட்சம் என சி.பி.ஐ. கூறியுள்ளது.
மேலும் நீதிபதி வீராசாமியின் வருமானம் ரூ.4.87 லட்சம் என்று குற்றப்பத்திரிக்கையில்குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் விசாரணையின்போது சி.பி.ஐ. வேறு குறைந்த தொகையையேதெரிவித்துள்ளது. இதை ஏற்க முடியாது.
நீதிபதி வீராசாமியின் உண்மையான வருமானத்தை சி.பி.ஐ. வேண்டுமென்றே குறிப்பிடாததால்சொத்துக்கள் தொடர்பாக அவர் குறிப்பிட்டுள்ள வாக்குமூலத்தையே நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது.
சந்தேகத்திற்கு இடமின்றி குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க சி.பி.ஐ. தவறிவிட்டதால் நீதிபதி வீராசாமிகுற்றமற்றவர் எனத் தீர்மானித்து அவரை விடுதலை செய்ய உத்தரவிடுகிறேன் என்று தன் தீர்ப்பில்நீதிபதி ராமசாமி கூறியுள்ளார்.
-->
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications