பொடா சட்ட திருத்த குழு விரைவில் பணியை தொடங்கும்: மத்திய அரசு
சென்னை:
பொடா சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதை ஆராய்வதற்காக அமைக்கப்பட்டுள்ளமத்தியக் குழு விரைவில் தன் பணிகளை தொடங்க உள்ளதாக மத்திய உள்துறை செயலாளர் என்.கோபால்சாமி கூறியுள்ளார்.
விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதாக கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி பொடா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்னும் வேலூர் சிறையில்அடைக்கப்பட்டுள்ளார்.
கைதாகி பல மாதங்களாகியும் மத்திய அரசு கண்டு கொள்ளாததைத் தொடர்ந்து, பொடா சட்டத்தில்பேச்சுரிமையைத் தடுக்கும் பிரிவை நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வைகோ வழக்கு தொடர்ந்தார்.
இந்தப் பிரிவு காரணமாகத்தான் பொடா சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக வைகோ புகார்கூறி உள்ளார்.
இதற்கிடையே பொடா சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக பல மாநிலங்களிலிருந்தும் மத்தியஅரசுக்குப் புகார்கள் வந்து குவியத் தொடங்கின. பொடா சட்டத்தையே நீக்க வேண்டும் என்றுபிரதமர் வாஜ்பாய்க்கு திமு கோரிக்கை விடுத்தது.
இதையடுத்து பொடா சட்டத்தைத் திருத்துவது குறித்து ஆராய பஞ்சாப் உயர் நீதிமன்ற முன்னாள்தலைமை நீதிபதி அருண் சஹாரியா தலைமையில் மூன்று பேர் கொண்ட கமிட்டியை மத்திய அரசுஅமைத்தது.
பொடாவுக்கு எதிராக வந்துள்ள அனைத்து புகார்களையும் இந்தக் கமிட்டிக்கு அனுப்பி வைக்கமத்திய அரசு முடிவு செய்துள்ளது. சென்னையில் இன்று நிருபர்களிடம் பேசிய மத்திய உள்துறைச்செயலாளர் கோபால்சாமி,
தீவிரவாதிகளை ஒழிப்பதற்காகத்தான் பொடா சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டத்தில்திருத்தம் கொண்டுவருவது தொடர்பாக கமிட்டி அமைப்பதற்கான வழிமுறைகளும் பொடாசட்டத்தின் 60 பிரிவில் கூறப்பட்டுள்ளது.
அதன்படிதான் தற்போது புதிய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அது விரைவில் செயல்படத்தொடங்கும்.
நள்ளிரவுக் கைதுகள் தொடர்பாக ஏற்கனவே உச்ச நீதிமன்றம் சில வழிமுறைகளைத்தெரிவித்துள்ளது. அதை மீறிக் கைது செய்யப்பட்டிருந்தால் அவர்களுக்குத் தேவையான சட்டரீதியிலான உதவிகளை மத்திய அரசு அளிக்கும்.
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிப்பதற்குத் தேவையான உதவிகளைத் தமிழக அரசு கேட்டால்அவற்றை உடனடியாக அளிப்பதற்கு மத்திய அரசு தயாராகவே உள்ளது. தமிழக அரசு போலீஸ்துறையில் தேவையான அளவுக்குச் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. இது மத்திய அரசுக்குதிருப்தி அளித்துள்ளது என்றார் கோபால்சாமி.
கோபால்சாமி தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக, மதிமுகவுக்கு இ.கம்யூ. சூடு:இதற்கிடையே பொடா சட்டம் தொடர்பான விவகாரத்தில் திமுக, மதிமுக போன்ற கட்சிகள்தெளிவில்லாமல் இருப்பது மிகவும் கேவலமாக உள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
தர்மபுரியில் நிருபர்களிடம் இக்கட்சியின் தேசிய செயலாளர் ராஜா பேசுகையில்,
பொடா சட்டத்தை நிறைவேற்றுவதற்கான ஓட்டெடுப்பில் அந்தச் சட்டத்தை ஆதரித்து திமுகவும்மதிமுகவும் ஓட்டளித்தன. தற்போதோ இரு கட்சிகளும் அந்தச் சட்டத்தைக் கடுமையாகஎதிர்க்கின்றன.
ஆனால் அவர்களுடைய எதிர்ப்பை மத்திய அரசு கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.இருந்தாலும் மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் இன்னும்அந்த இரு கட்சிகளும் தொடர்ந்து நீடிக்கின்றன. இது மிகவும் கேவலமாக உள்ளது.
நாங்கள் அப்படி அல்ல. ஆரம்பத்திலிருந்தே பொடா சட்டத்தைத் தொடர்ந்து கடுமையாக எதிர்த்துக்கொண்டுதான் வருகிறோம்.
தீவிரவாதத்தை ஒழித்துக் கட்டுவதற்காகத்தான் பொடா சட்டம் கொண்டுவரப்பட்டதாக மத்திய அரசுதிரும்பத் திரும்பக் கூறி வருவது மிகவும் வேடிக்கையாக உள்ளது. இந்தப் பொடா சட்டம்கொண்டுவரப்பட்ட பின்னர்தான் நாடாளுமன்றத்திலும் காஷ்மீர் சட்டசபையிலும் தீவிரவாதிகள்பயங்கரத் தாக்குதல்களை நடத்தினார்கள்.
தமிழகத்தில் எதிர்க் கட்சி எம்.எல்.ஏக்கள் தங்களுடைய ஜனநாயகக் கடமைகளைக் கூட ஆற்றவிடாமல் அதிமுக அரசு கொடுமையான ஆட்சி நடத்தி வருகிறது என்றார் ராஜா.
ஆனாலும் அரசியல் சட்டத்தின் 356வது பிரிவைப் பயன்படுத்தி தமிழக அரசைக் கலைக்கவேண்டிய அவசியம் இல்லை என்றும் அதை இந்திய கம்யூனிஸ்ட் ஆதரிக்காது என்றும் அவர்கூறினார்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications