மே 15ம் தேதி இந்திய- இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை
ராமநாதபுரம்:
எதிர்காலத்தில் இந்திய- இலங்கை மீனவர்கள் இடையிலான மோதலைத் தவிர்ப்பது குறித்து வரும் மே 15ம் தேதிஇரு நாட்டு மீனவர்களும் நேரில் சந்தித்து விவாதிக்கவுள்ளனர்.
பாக் ஜலசந்தியில் இரு நாட்டு மீனவர்களும் மோதலில் ஈடுபடாமல் மீன் பிடிப்பது குறித்து அப்போது சிலவிதிமுறைகள் வகுக்கப்படும்.
தென்னிந்திய மீனவர் சங்கமும் இலங்கை மீனவர் சங்கமும் தலைமன்னாரில் இந்தப் பேச்சுவார்த்தையைநடத்தவுள்ளன.
நாகர்கோவில், புதுக்கோட்டை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 15 மீனவர்கள் இந்தப்பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பர்.
இலங்கை சார்பில் மன்னார் மீனவர் சங்கத்தினரும் சில எம்.பிக்களும் இந்தப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவர். இத்தகவலை மன்னார் மீனவர் சங்கத் தலைவர் தன்சிலால் தெரிவித்தார்.
இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கான ஏற்பாடுகள் முழுக்க முழுக்க மீனவர் அமைப்புகளால் தான்மேற்கொள்ளப்பட்டன. மத்திய அரசோ, மாநில அரசோ அல்லது இலங்கை அரசோ இதில் எந்த உதவியும்செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை:
இதற்கிடையே இலங்கை சிறைகளில் அடைபட்டு வாடி வரும் தமிழக மீனவர்கள் 30 பேரை மீட்க தீவிரநடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அப்பாவி மீனவர் மீட்பு இயக்கம் என்ற அமைப்பு கூறியுள்ளது.
இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் விவேகானந்தன் ராமேஸ்வரத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்.
கொழும்புவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளுடன் 30 மீனவர்களை மீட்பது தொடர்பாக நேரில் பேச முடிவுசெய்துள்ளோம். இந்த 30 பேரில் நான்கு பேர் நாகப்பட்டனம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், 26 பேர்ராமேஸ்வரம், மண்டபம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
இந்திய தூதரக அதிகாரிகளைச் சந்திக்க கொழும்பு செல்லும் குழுவில் மீனவர் அமைப்புகளின் பிரதிநிதிகளும்இடம் பெறுவார்கள். ராமநாதபுரம் கடல் பகுதியில் இந்திய மீனவர்களுக்கு உள்ள மீன் பிடி உரிமை குறித்தும்அப்போது விவாதிக்கப்படும் என்றார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications