டேங்கர் லாரிகளும் ஸ்டிரைக்கில் குதித்தன
டெல்லி:
லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் 7வது நாளை எட்டியுள்ள நிலையில் டேங்கர் லாரிகளும்இந்த வேலைநிறுத்தத்தில் குதித்துள்ளன. இதனால் பெட்ரோல், டீசலுக்குக் கடும் தட்டுப்பாடுஏற்படும் எனத் தெரிகிறது.
அடிக்கடி டீசல் விலைகள் உயர்த்தப்படுவதைக் கண்டித்தும், ஒவ்வொரு மாநிலத்திலும்லாரிகளுக்கென தனித்தனியாக சுங்க வரி விதிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்தும் வேறு பலகோரிக்கைகளை வலியுறுத்தியும் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில்ஈடுபட்டுள்ளனர்.
இன்றுடன் ஒரு வாரம் முடிவடையும் நிலையில் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தப்போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களைக் கொண்டு செல்லும் டேங்கர் லாரிகளும்வேலைநிறுத்தத்தில் குதித்துள்ளன.
இதனால் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்படும் என்றுதெரிகிறது.
ஏற்கனவே கடந்த வாரம் சென்னையில் பெட்ரோல், டீசலுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு, வாகனஉரிமையாளர்கள் பெரும் அவதி அடைந்தனர் என்பது நினைவிருக்கலாம். இருந்தாலும் ஓரிருநாட்களில் நிலைமை சீராகியது.
இந்நிலையில் டேங்கர் லாரிகள் முழு அளவில் போராட்டத்தில் குதித்துள்ளதால் பெட்ரோல், டீசல்ஆகியவற்றுக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்படும் என அஞ்சப்படுகிறது.
டேங்கர் லாரிகளைத் தொடர்ந்து பால் மற்றும் குடிநீர் லாரி உரிமையாளர்களும் வேலைநிறுத்தப்போராட்டத்தில் குதிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.
நாளை வாஜ்பாயுடன் பேச்சு:
இதற்கிடையே தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் நாளை பிரதமர்வாஜ்பாயுடன் பேச்சு நடத்த உள்ளனர்.
பிரதமருடன் சுமூகமான பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் இப்பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும்என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மேலும் சுமார் 10 நாட்கள் விடுமுறைக்குப் பின்னர் நாளை நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில்அதன் முன்பாகப் போராட்டம் நடத்தவும் லாரி உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications