மீன்பிடிக்கத் தடை: தஞ்சை அருகே மீனவர் பட்டினியால் சாவு

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் பகுதியில் பட்டினியால் ஒரு மீனவர் மயங்கி விழுந்து இறந்தார்.

மீன் வளம் காப்பதற்காக 2 மாதங்ளுக்கு கடலில் மீன் பிடிக்க அரசு தடை விதித்துள்ளது. இதுமட்டுமல்லாது, கடந்த சில மாதங்களாகவே மீன் பிடி தொழில் தமிழகம் முழுவதிலும் பல்வேறுஇடர்பாடுகளைச் சந்தித்துவருகிறது.

இதனால் தஞ்சாவூர், நாகப்பட்டினம் பகுதி மீனவர்கள் தொழில் இல்லாமல் வறுமையில்

வாடி வருகின்றனர். அவர்களுக்கு அன்றாடம் ஒரு வேளை சாப்பாடு கிடைப்பதே கேள்விக்குறியாகி உள்ளது.

குறிப்பாக, தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் பகுதியில் ஏராளமான மீனவர்கள் உள்ளனர்.அவர்களுக்கு கடந்த சில மாதங்களாகவே தொழில் இல்லை. இதனால்

அவர்கள் வறுமையில் வாடிக் காண்டுள்ளனர். சாப்பிடக் கூட வழியில்லாமல் பல மீனவர்கள்பரிதவித்துக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் மல்லிப்பட்டினத்தைச் சேர்ந்த பக்கிரிசாமி என்ற மீனவர் பசி காரணமாக இன்று காலைமயங்கி விழுந்து மரணமடைந்தார்.

பட்டினியால் மீனவர் இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து மீன்பிடித் தொழில் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,600 கோடி வருமானம் ஈட்டித்தருவதாகவும், எனவே தங்களுக்கு உடனடியாக மானியம் வழங்க வேண்டும் என்றும் அரசுக்குமீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உரிய மானியத்தை வழங்க அரசு தவறினால் மேலும் பல மீனவர்கள் பட்டினியால் மாண்டு போகநேரிடும் என்றும் அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+