பாக்தாதிற்கு விரைவில் பயணிகள் விமான சேவை
துபாய்:
சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பாக்தாதிற்கு செல்லும் விமானங்களை நிறுத்தி வைத்திருந்த பலவிமான நிறுவனங்கள் மீண்டும் அந்நகருக்கு விமானங்களை இயக்க உள்ளன.
இதேபோல் மேலும் பல முக்கியமான விமான நிறுவனங்கள் பாக்தாதிற்கான விமான சேவைகளைநிறுத்தி விட்டன. ஈராக் செல்ல விரும்புபவர்கள் அம்மான் வந்து அங்கிருந்து கார் மூலம்தான்பாக்தாதிற்குச் சென்று கொண்டிருந்தனர்.
இந்நிலையில் பாக்தாத் விமான நிலையம் அடுத்த ஓரிரு நாட்களில் திறக்கப்படும் என அமெரிக்கப்படையினர் அறிவித்துள்ளனர். இதையடுத்து பயணிகள் விமானப் போக்குவரத்துக்கும் இந்த விமானநிலையம் திறந்துவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து பாக்தாதிற்கு மீண்டும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானங்கள் இயக்கப்பட உள்ளன.
அதேபோல் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்ட கல்ப் ஏர் விமானங்களும் விரைவில்பாக்தாதிற்குத் தங்கள் சேவையைத் தொடங்க உள்ளன. மேலும் எமிரேட்ஸ், கட்டார் ஏர்வேஸ்விமான நிறுவனங்களும் பாக்தாதிற்கு விமானங்களை விரைவில் இயக்கவுள்ளன.
சதாமின் மருமகன் சரண்:
இதற்கிடையே ஈராக் முன்னாள் அதிபர் சதாம் ஹூசேனின் மருமகன் பாக்தாதில் சரணடைந்தார்.மேலும் முன்னாள் அமைச்சர் ஒருவரை அமெரி அமெரிக்கப் படையினர் கைது செய்துள்ளனர்.
சதாம் உள்ளிட்ட பிடிபட வேண்டிய 55 ஈராக் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பட்டியல் ஒன்றைஅமெரிக்கா தயாரித்துள்ளது. இந்தப் பட்டியலில் உள்ள சிலர் ஏற்கனவே அமெரிக்கப்படையினரிடம் சிக்கியுள்ளனர். இந்நிலையில் மேலும் 2 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈராக் முன்னாள் கல்வித் துறை அமைச்சர் அப்த் அல்-காலிக் அல்-காபர் என்பவரை அமெரிக்கப்படையினர் கைது செய்துள்ளனர்.
இவரைத் தவிர ஜமால் முஸ்தபா அப்துல்லா என்ற முக்கிய அதிகாரி ஒருவர் ஈராக் தேசியகாங்கிரசிடம் சரணடைந்தார். சதாமின் இளைய மகளான ஹாலாவின் கணவர்தான் முஸ்தபா.
இவர் இவ்வளவு நாட்களும் சிரியாவிடம் அடைக்கலமாகி இருந்தார். தற்போது சிரியாவிலிருந்துபாக்தாத் வந்து சரணடைந்துள்ளார். இந்த இருவருமே அமெரிக்காவின் தேடப்படுவோர் பட்டியலில்இருந்தனர். இவர்களுடன் இதுவரை மொத்தம் 7 பேர் பிடிபட்டுள்ளனர். சதாம் உள்பட இன்னும் 48பேர் தலைமறைவாகியுள்ளனர்.
மேலும் உலக உணவு நிறுவனம் அனுப்பியுள்ள சுமார் 1,400 மெட்ரிக் டன் கோதுமை நேற்றுபாக்தாத் வந்து சேர்ந்தது. சுமார் 50 லாரிகளில் இந்தக் கோதுமை மூட்டைகள் வந்து சேர்ந்தன.இதையடுத்து பாக்தாதில் பெருமளவு உணவுப் பிரச்சனை தீர்ந்து விடும் எனத் தெரிகிறது.
இதற்கிடையே ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இல்லை என்பதை அமெரிக்க செயற்கைக்கோள்கள்கண்டறிந்துள்ளன.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications