பாலசிங்கம்- அமைச்சர் சந்திப்பு: புலிகள் திடீர் ரத்து
கொழும்பு:
இலங்கை அரசுடனான முக்கிய சந்திப்பு ஒன்றை விடுதலைப்புலிகள் ரத்து செய்துள்ளனர்.
புலிகள் அமைதிப் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரும் அவ்வியக்கத்தின் அரசியல்ஆலோசகருமான ஆன்டன் பாலசிங்கமும் இலங்கை அரசு அமைதிப் பேச்சுவார்த்தைக் குழுவின்தலைவர் பெய்ரிசும் இன்று தனியாகச் சந்தித்துப் பேச இருந்தனர்.
லண்டனில் இந்தச் சந்திப்பு நடைபெறும் என்றும், அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்பாகப் பலவிஷயங்கள் குறித்து இந்தச் சந்திப்பின் போது பேசப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்தச் சந்திப்பை திடீரென்று ரத்து செய்துள்ளார் பாலசிங்கம். ஆனால் இது ரத்துசெய்யப்பட்டதற்கான காரணத்தை அவர் அறிவிக்கவில்லை.
புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே இதுவரை 6 சுற்றுப் பேச்சுக்கள் முடிவடைந்துள்ளன.வரும் 29ம் தேதி முதல் மே 2ம் தேதி வரை 7வது சுற்றுப் பேச்சுக்கள் தாய்லாந்தில் நடைபெறவுள்ளனஎன்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் வாஷிங்டனில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்பான ஒரு மாநாட்டில்புலிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications