நெடுமாறனுக்கு ஜாமீன் தர பொடா நீதிமன்றம் மறுப்பு
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன்மற்றும் அக்கட்சிப் பிரமுகர்களின் ஜாமீன் மனுவை பொடா சிறப்பு நீதிமன்றம் இன்று நிராகரித்தது.
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாகக் கடந்த ஆண்டு ஆகஸ்டு 1ம் தேதி நெடுமாறன்கைது செய்யப்பட்டார். அவர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தமிழர் தேசிய இயக்கப் பிரமுகர்களான சுப. வீரபாண்டியன், பரந்தாமன், சாகுல் ஹமீது, தாயப்பன்,பாவாணன் ஆகியோரும் புலிகளை ஆதரித்துப் பேசியதாகக் கைது செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தங்களை ஜாமீனில் விடக் கோரி 6 பேரும் பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில்மனுத்தாக்கல் செய்தனர்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி ராஜேந்திரன் பல முறை தீர்ப்பை ஒத்திவைத்து விட்டு பின்னர் கடந்த17ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று அறிவித்தார். ஆனால் அன்றும் தீர்ப்பு அளிக்கப்படவில்லை.தீர்ப்பை 21ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
அதன்படி இவ்வழக்கின் தீர்ப்பை நீதிபதி ராஜேந்திரன் இன்று வழங்கினார். நெடுமாறன் உள்ளிட்ட 6பேரின் ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
"கைது செய்யப்பட்டுள்ள நெடுமாறன் உள்ளிட்ட 6 பேரும் தொடர்ந்து புலிகளை ஆதரித்துக்கொண்டுள்ளனர். எனவே அவர்களை ஜாமீனில் விடுதலை செய்தால் அவர்கள் வெளியே சென்றுசாட்சிகளைக் கலைக்க முயற்சிக்கலாம். எனவே அவர்களுடைய ஜாமீன் மனுவைத் தள்ளுபடிசெய்கிறேன்" என்று நீதிபதி ராஜேந்திரன் தன் தீர்ப்பில் கூறியுள்ளார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications